பக்கம்:வழுக்கு நிலம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ரா. சீனிவாசன் "நீங்கள் மனம்வந்து கொடுத்தால் நான் மனம் உவந்து எடுக்கிறேன்.” "என்ன உடம்பு. ஏதாவது சரியாக இல்லையா?" "அதுதான் காரணம் என்று எழுதியிருந்தேன். இந்த உடம்பு என்ற ஒன்று. இருப்பதால்தான் லீவு கேட்பதற்கு வசதியாக இருக்கிறது. ஆபீசில் லீவு கேட்பதற்கு வேறு எந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்?” "எந்தக் காரணத்தைச் சொல்லுவையோ, எப்படியும் அந்த வேலையெல்லாம் நீதான் செய்தாக வேண்டும்.” "அது தெரியும். சுமக்கிற கழுதை சுமந்துதான் தீர வேண்டும்.” புருவத்தை நெரித்துக் கொண்டு கொஞ்சம் தலையை மேலே தூக்கிப் பார்த்தார். "என்னப்பா! அவரவர்களுக்குப் பழக்கமான வேலையை அவரவர்கள்தானே செய்ய முடியும் ? புதியதாக வேறு யாருக்காவது போட்டால் மறுபடியும் அதைத் திருத்த உனக்குத்தானே இரட்டிப்பு வேலையாகும்?" "நான் ஒன்றும் குறை சொல்லவில்லை. உள்ளதைச் சொன்னேன். அவ்வளவுதான்.” தணிகாசலம் தன் வேலையில் ஆழ்ந்து விட்டதால் மேலும் பேச்சுத் தொடராமல் நின்று விட்டது. சிவராமனுக்குச் சாரதாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனையும் அறியாமல் எழுந்தது. அவனுக்கு முன்னால் ஆங்கில இந்திய மாது ஒருத்தி உட்கார்ந்து அவளை மறைத்துக்கொண்டிருந்தாள். டக், டக் என்ற அச்சு இயந்திர ஒலி இடைநேரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. சாரதாவுக்கு முன்னால் இருந்த இயந்திரம் மட்டும் வேலை நிறுத்தம் செய்திருந்தது. அவள் செவிகள் சிவராமன் பேச்சில் ஈடுபட்டு விட்டதால் அவள் கைகள் தம் கடமையைச் சரிவரச் செய்ய மறுத்துவிட்டன. சிவராமனுக்கு உடம்பு ஒன்றும் இல்லை என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் அவள் கைவிரல்கள் அந்தக் கருவியை அசைக்கத் தொடங்கின. ஒய்வெடுத்துக் கொண்ட நாட்களில் மனம் ஒய்வில்லாமல் சுற்றி வட்ட மிட்டுக் கொண்டிருந்த உருவத்தைக் காண அவன் கண்கள் அவாவின. உள்ளத்தில் எண்ண வடிவமாக ஒளிபெற்றிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/148&oldid=898085" இலிருந்து மீள்விக்கப்பட்டது