பக்கம்:வழுக்கு நிலம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ( ரா. சீனிவாசன் சிறிது நேரத்திற்கெல்லாம் மணி ஐந்தடித்தது. எங்கே போவது, என்ன செய்வது என்று திட்டமில்லாமல் கொஞ்ச நேரம் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். மறுபடியும் தனக்குப் பழக்கமான அந்தப் பழைய அறை: வயதும் அனுபவமும் வாய்ந்த மேசை, நாற்காலிகள், கிழிந்து கிடந்த காலண்டர், பழக்கமான தன் போட்டோக்கள், காலியான சுவர்கள், வர்ணம் பூசாத கதவுகள் இவற்றின் மத்தியில் திட்டமில்லாத தன் தனிவாழ்க்கை, அந்த வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் தனிமையுணர்வு, அதனால் ஏற்படும் வெறுப்பு, இவ்வளவும் அவன் மனத்தில் ஒரு சிறு படம் போலக் காட்சி அளித்தது. அதனாலேயே சாரதாவொடு கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்ற ஆசை அவனிடம் குடிகொண்டது. அதைச் செயலாற்றக் காத்துக் கொண்டிருந்தவனைப் போல் மற்றவர்கள் எல்லோரும் போகும்வரை காத்துக்கொண்டு இருந்தான். சாராதாவும் எந்திரத்தை மூடிவிட்டுத் தன் கைப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு புறப்பட எழுந்தாள். எழுந்து சிவராமனைப் பார்க்கச் சிறிது நாணங் கொண்ட வளாகக் காணப்பட்டாள். இந்தப் புதுமை சிவராமனுக்கு வியப்பாக இருந்தது. வெட்கம் கொள்ளாமல் பேசும் அவள் இயல்பு மாறக் காரணம் என்ன என்று ஆராய்ந்தான். ஆனால் அவனால் அவ்வளவு சீக்கிரத்தில் விடை காணமுடியவில்லை. இதற்கு முன்னால் தான் பார்த்த அந்தப் பார்வை பொது நோக்கமாக இருந்ததையும், இப்போது பார்க்கும் பார்வையில் ஏதோ உணர்ச்சி கலந்து இருப்பதையும் உணர முடிந்தது. அதனால்தான் அந்த நாணம் அவளை வந்தடைந்திருக்க வேண்டும் என்று ஒரு வகையாக உணர்ந்தான். ஆபீசை விட்டு இருவரும் வெளியே சென்றனர். இவர்கள் சென்றதைப் பார்த்த ஆபீஸ் பியூன் இனிமேல் யாரும் உள்ளே இருக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு கதவுகளை மூடினான். இவர்கள் இருவரும் ஆபீசை விட்டு வெளியே வந்து விட்டால் இனி யாரும் அங்கே இருக்க மாட்டார்கள் என்பதுதான் அவன் நம்பிக்கை. அவன்மனம் பெண்களே இல்லாதிருந்த அந்த ஆபீஸ் நாட்களைப் பற்றி எண்ணத் தொடங்கியது. பெண்கள் ஓரிருவர் ஆபீசில் இருந்தால்தான் ஆபீஸ் கொஞ்சம் களையாக இருக்கும்; வேலையும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடக்கும் என்பது அவன் அனுபவத்தில் தெரிந்துகொண்ட உண்மையாக இருந்தது. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/150&oldid=898091" இலிருந்து மீள்விக்கப்பட்டது