பக்கம்:வழுக்கு நிலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 149 நாட்களில் ஆபீசுக்கு வந்தவர்கள் சரியாகத் தலைவாராமல் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டுக் குடுமியை ஆறப் போட்டுக்கொண்டு. பித்தான் இல்லாத சட்டை போட்டுக்கொண்டு வந்த நிலைமையும் இப்பொழுதெல்லாம் புஷ் ஷர்ட்டும் மடிப்புக் கலையாத பேண்ட்டும் ஒழுங்காக வாரிவிட்ட கிராப்பும் சுறுசுறுப்பான பார்வையும் கொண்ட நிலைமையும் இந்த மாறுதலால் ஏற்பட்டது என்று அவனுக்கு அவன் அனுபவம் உணர்த்தத் தொடங்கியது. தனக்கே இப்பொழுதுதெல்லாம் ஆபீஸ் வேலையில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டிருப்பது கூட இந்த மாறுதலினால் தானோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் தான் இந்த நிலையெல்லாம் கடந்து இருப்பதாகத் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான். அவனுக்கு இப்படி ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகுவது பிடிக்காமல் இருந்தது என்பது அவன் கொஞ்சம் வேகமாகச்சாத்திய கதவுகளின் சப்தம் எடுத்துச் சொல்வது போல் இருந்தது. வெளியே வந்த இருவரும் கொஞ்சதூரம் பேசாமல் நடந்து சென்றனர். சிவராமனே அந்த அமைதியைக் கலைக்க முடிவு கொண்டான். "ஆபீசில் இந்த ஒரு வாரமாக ஏதாவது விசேஷம் உண்டா ?” "நீங்கள் வராதிருந்தது ஒரு விசேஷம்" என்று சொல்ல இருவரும் ஒரு சேரச் சிரித்தனர். "ஏன் உங்களுக்கு உடம்பு சரியாக இல்லையா?” "சும்மா லீவு எடுப்போமே என்று எடுத்து வைத்தேன். வேறு ஒன்றும் இல்லை." "ஒரு வேளை ஈட்டிக்காரன் ஏதாவது ஆபீசில் வந்து தொந்தரவு கொடுப்பான் என்று." "அதற்குத்தான் நீ இருக்கிறாயே" என்று சொல்லிச் சிரித்தான். "ஏதாவது கஷ்டம் இருந்தால் சொல்லுங்கள். நான் வேண்டுமானால் அவன் மொத்த பாக்கியையும் கொடுத்து விடுகிறேன்." "நிரம்ப நன்றி. எனக்குத் தேவையில்லை. நீ செய்த உதவியே போதும். அவனுக்கு இனி நான் ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/151&oldid=898093" இலிருந்து மீள்விக்கப்பட்டது