பக்கம்:வழுக்கு நிலம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ரா. சீனிவாசன் "அப்பொழுது இனிமேல் என்னைப் பற்றி.” "நினைக்காமல் எப்படியிருக்க முடியும். நீயும் நானும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறோம். நான் எழுதுகிற குறிப்பை நீ டைப்' அடிக்க வேண்டும். நீ "டைப் பண்ணியதை நான் பார்த்துக் கையெழுத்திட வேண்டும். நம் உறவு எப்பொழுதும் நீடித்து இருக்கும்." "நீடித்து இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை." "ஏன்? ஆபீஸ் வேலையை விடப் போகிறாயா?” "ஆமாம். என்னைச் சினிமாவில் நடிக்கக் கூப்பிடு கிறார்கள். என் முகவெட்டு நன்றாக இருக்கிறதாம். எங்கள் அப்பாவுக்கு ஒரு சில டைரக்டர்கள் தெரியுமாம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்!" "நான் என்ன சொல்வது? நீ அகில உலக சினிமா நட்சத்திரம் ஆக மாறி விட்டால் நான்கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். இப்பொழுது 'ரதா என்பவளின், பூர்வ ஜென்மப் பெயர் 'சாரதா என்பது. எங்களோடு ஆபீசில் வேலை செய்து வந்தாள். நானும் அவளோடு நெருங்கிப் பழகினவன்" என்று பெருமைக்காவது சொல்லி வைப்பேன்." 'நெருங்கிப் பழகின வன்' என்று சொன்னபோது சாரதாவிற்கு என்னமோ மாதிரி இருந்தது. அத்தகைய வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை தோன்றிக்கொண்டிருந்தது. அதற்குள் ஜன நடமாட்டம் நெருக்கமாக இருந்த 'பிராட்வே பகுதியை வந்தடைந்து விட்டார்கள். பேச்சை நிறுத்திக் கொண்டு நெடுஞ் சாலையைக் கடக்கும் கட்டத்திற்கு வந்தார்கள். துன்பம் நீங்கியது. சட்டக் கல்லூரியின் பாதையோரமாக மெல்ல நடந்து சென்றனர். சட்டக் கல்லூரியின் பாதையில் அதே ஜோஸ்யன் சந்தனப் பொட்டின் நடுவில் சிறிது குங்குமம் கூடுதலாக வைத்துக் கொண்டு தன் திறமையால் மற்றவர்களின் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான். - "இதோ பாரு! இந்த ஜோஸ்யனைக் கேட்டால் சொல்லி விடுகிறான்." "அவன் கிடக்கிறான். நீங்கள் சொன்னால் போதும் எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/152&oldid=898095" இலிருந்து மீள்விக்கப்பட்டது