பக்கம்:வழுக்கு நிலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 151 அவள் முகத்தை மறுபடியும் பார்த்தான். கரிய விழிகள் அவன் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. மின்னல் ஒன்று தாக்கியதைப் போல் அவன் எண்ணங் கொண்டான். அவர்கள் நாடிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தது. சாராதா ஒன்பதாம் எண் பஸ்ஸில் ஏறினாள். அவனும் உடன் ஏற ஆரம்பித்தான். சாரதாவின் வியப்பை எதிர்பார்த்தான். அவள் வியப்புடன் இவனைப் பார்த்தாள். "நானும் தி. நகருக்குத்தான் வருகிறேன்." "எங்கள் வீட்டுக்கா?" அதில் அவளுக்கு அச்சம் சிறிது கலந்திருந்தது." "இல்லை, என் வீட்டுக்கு, நான் தி. நகருக்கு வீடு மாற்றிக் கொண்டேன்.” "ஏன்? அமைந்தகரையில் வீடு...?” "செளகரியப்பட வில்லை.” இருவருக்கும் சேர்த்து சிவராமனே டிக்கட் வாங்கினான். ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு மற்றொன்றைத் தன் புஷ் ஷர்ட் ஜேபியில் போட்டுக் கொண்டான். பனகல் பூங்காவில் சாரதா முன் பக்கம் இறங்கினாள். அவளைத் தொடர்ந்து சிவராமனும் பஸ்ஸை விட்டுக் கிழே இறங்கினான். அவள் பையை எடுத்துத் தோளில் சரியாக மாட்டிக் கொண்டாள். சிவராமனுக்கு அருகிலிருந்து "பனகல் பூங்கா"வில் சிறிது நேரம் உட்கார்ந்து சாரதாவிடம் பேசிக் கொண்டே யிருக்கலாம் போலத் தோன்றியது. அந்தச் சுற்றுப் புறத்தில் அவனுக்கு அறிமுகமானவர்கள் இல்லாத காரணத்தால் அங்கே அமைதியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு பொழுது போக்ப் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கு விருப்பம் பூங்காவில் பாக்கு மரங்கள் அழகாக இருந்தன. மாலை மயங்கும் நேரமாக இருந்தது. கேட்பார் அற்று வானொலி பாடிக்கொண்டிருந்தது. கர்நாடக சங்கீதம் வானொலிக் கருவியின் கரகரப்பு ஒலியோடு கலந்து கேட்டுக் கொண்டிருந்தது. "ஏன் வீட்டை மாற்றிக் கொண்டு வந்து விட்டீர்கள்?" "அந்த வீட்டுச் சொந்தக்காரன் அந்த வீட்டிற்குக் குடி வர வேண்டும் என்று கேட்டான். சரி, ஒழிந்து போகிறான் என்று காலி செய்து விட்டேன். உங்கள் வீடு எங்கே இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/153&oldid=898097" இலிருந்து மீள்விக்கப்பட்டது