பக்கம்:வழுக்கு நிலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ரா. சீனிவாசன் "இதோ அந்தப் பக்கம். அந்தப் பெண் பாடசாலையை அடுத்திருக்கிறது.” "வானொலி கொஞ்சம் நன்றாக இருக்கிறது அல்லவா!' "ஆமாம், கொஞ்சம் கேட்டுவிட்டுத்தான் போங்களேன்." "நீயும் வருகிறாயா? கொஞ்ச நேரம்." எப்படியோ வாய் விட்டு வெளி வந்துவிட்டன. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. மின்சாரம் தாக்கியது போல இருந்தது சாரதாவுக்கு பக்கத்திலிருந்த பாக்கு மரங்கள் 'சலசல' வென்று ஆட ஆரம்பித்தன. இரண்டு பஸ்கள் எதிர் எதிரே ஓடிக்கொண்டிருந்தன. அவள் கால்கள் அவள் மனத்தை அறிந்து பூங்காவினுள் நுழைந்தன. பூங்காவின் உட்பகுதியில் ஆங்காங்கு போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகளில் கொஞ்சம் ஒதுங்கி ஒரு புறமாகப் போடப் பட்டிருந்த நாற்காலியே அவர்களுக்கு வரவேற்பு அளித்தது. கைக் குட்டையால் அதைத் துடைத்து விட்டு அதில் அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். ஓங்கிவளர்ந்த செடிகள் சில அடர்த்தியாக இருந்தன. சிறுவர்கள் ஒடியாடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிறுவன் இவர்கள் உட்கார்ந்து கொண்டு இருந்த சிமெண்ட் நாற்காலியின் கீழ் ஒடி வந்து ஒளிந்து கொண்டான். அடிக்கடி அவன் கூச்சல் போட்டுக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அங்கங்கே போடப்பட்டிருந்த நாற்காலி களில் சில இளைஞர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வயது வந்தவர்களும் ஒருசிலர் உட்கார்ந்து கொண்டு கடந்த கால அனுபவங்களைச் சிந்தித்துக் கொண்டு இருந்தனர். இளைஞர்களின் விழிகள் துரு துரு என்று புதுமையை நாடிக் கொண்டிருந்தன. அந்த விழிகளுக்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுத்தவர் போலச் சிறிது இடம் விட்டே சிவராமனும் பார்வதியும் உட்கார்ந்தார்கள். "நான் கேட்டதற்கு ஒன்றும் முடிவு சொல்ல வில்லையே?" என்ன சொல்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் பேசாமல் இருந்தான். "ஏன்? நான் சினிமாவில் சேர்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா? அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நான் சேரவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/154&oldid=898099" இலிருந்து மீள்விக்கப்பட்டது