பக்கம்:வழுக்கு நிலம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 153 இப்பொழுதுதான் அவள் கேட்ட கேள்வி ஞாபகத்திற்கு வந்தது. நின்று போன இருதயம் மறுபடியும் வேலை செய்யத் தொடங்கியது போல இருந்தது. அவள் எதிர் காலத்தையே தன் வெறுப்பு விருப்புகளை அடிப்படையாக வைத்து நிர்ணயிப்பது கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஓ! அதுவா! இந்த வேலையை விட அது பன்மடங்கு மேல். இது தொழில். அது கலை." அவள் சிரிக்க ஆரம்பித்தாள். "இந்தத் தி.நகர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” "நான் இருப்பது கோடம்பாக்கமா, தி.நகரா எனக்குத் தெரியாது. நான் இந்தக் கூட்டுச் சாலையில் இருக்கிறேன். தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது." "அதற்குத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தாள். அதற்கு அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் சும்மா இருந்தான். வானொலி தமிழ்ச் செய்தி சொல்லி முடிந்துவிட்டது. மின்சார விளக்குகள் இரவு நேரம் வந்து விட்டதை அறிவித்தன. சிவராமன் பதில் ஒன்றும் பேசாமல் இருந்தான். அதற்குள் நாற்காலியின் கீழ் ஒளிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பிடிக்க நான்கைந்து சிறுவர் சிறுமியர் வந்து சூழ்ந்து கொண்டார். அவனைப் பிடித்து வெளியே இழுத்தனர். "நீ தாண்டா பிடிக்க வேண்டும். கண்ணை மூடிக் கொள்.” அந்தச் சிறுவன் சிவராமனிடம் வந்தான். "மாமா! கொஞ்சம் கண்ணை மூடுங்களேன்.” அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான். அதற்குள் அந்தச் சிறுவனுக்குப் பொறுக்க நேரமில்லை. சாரதாவிடம் வந்து, "மாமி! கொஞ்சம் கண்ணை மூடுங்களேன்.” அவளால் மறுக்க முடியவில்லை. ക്7 ഓ ഞT மூடிவிட்டாள். அந்தச் சிறுவன் மற்றவர்களைப் பிடிக்க ஓடினான். அதற்குள் மற்றும் யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/155&oldid=898101" இலிருந்து மீள்விக்கப்பட்டது