பக்கம்:வழுக்கு நிலம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ரா. சீனிவாசன் ஒரு ஆள் அதே நாற்காலியில் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அழுக்கடைந்த ஆடையும், வளர்ந்திருந்த தாடியும், வாரிவிடாத தலையும் எல்லாம் சேர்ந்து ஆதியும் அந்தமும் இல்லா அனாதை எனச் சுட்டிக் காட்டியது. இனிமேல் அங்கே தனிமை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தவனாய்ச் சிவராமன், "வா! எழுந்திரு போகலாம்" என்றான். அவளும் அந்த இடத்தை விட்டு எழுந்தாள். திருமணத்தைப் பற்றிக் கேட்டது மிக்க அவசரம் என்று எண்ணியவளாய் இனி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நடந்தாள். அவனும் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தள்ளிப் போடுவது என்ற எண்ணத்தோடு பேச்சை மெல்ல மாற்றானான். "உனக்கு இந்தக் கர்நாடக சங்கீதம் பிடிக்குமா?" "எனக்குப் பயிற்சியும் உண்டு. பாடவும் கொஞ்சம் தெரியும்." "அப்படியானால் உன்னிடத்தில் ஒரு வரம் கேட்கலாம் என்று நினைக்கிறேன்." - "எப்பொழுதும் பாடக் கூடாது என்றா...?" "இல்லை. பாடினால், தமிழ்ச் சொல்லின் உச்சரிப்புத் தெளிவாகத் தெரியுமாறு பாட வேண்டும்." அதற்குள் பூங்காவின் வெளிப்புறம் கண்களுக்குத் தெரிந்தது. பக்கத்தில் இருந்த நடை பாதையில் காய்கறி விற்பவர்களிடம் காய்கறி வாங்கிக் கொண்டு கைகளில் பைகளைச் சுமந்து கொண்டு போய்க்கொண்டிருந்தனர். ரிக்ஷாக்காரன் ஒருவன் தன் "சைக்கிள் ரிக்ஷாவை'க் கொண்டு வந்து முன்னால் நிறுத்தினான். "ஏறிக் கொள்ளுங்க. இரண்டு பேரும் ஏறிக் கொள்ளலாம் ஏறுங்க சாமி. தாராளமாக அவன் அனுமதி கொடுத்தான். சிவராமன் என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கினான். அவன் அவனைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்தாள். ரிக்ஷாக்காரன் இருவரையும் பார்த்தான். "எண்ணிக்கொண்டிருக்க நேரமில்லை" என இருவரும் உணர்ந்தனர். "கோடம்பாக்கம் கூட்டு ரோடு” என்று சொல்லிய வண்ணம் சிவராமன் ரிக்ஷாவில் ஏறினான். சாரதாவும் உடன் ஏறினாள். அந்த மங்கலான வெளிச்சத்தில் ரிக்ஷா மெதுவாகச் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/156&oldid=898106" இலிருந்து மீள்விக்கப்பட்டது