பக்கம்:வழுக்கு நிலம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 155 22 "அம்மா! கடிதம் வந்திருக்கிறது." "படித்துச் சொல்லேன்." "சொல்வதற்கு என்ன இருக்கிறது. புறப்பட வேண்டியது தான். அவர் கட்டாயம் வரச் சொல்கிறார்.” "வரமுடியாது என்று உனக்குச் சொல்லத் திறமை இருந்தால் அவர்கள் எப்படி உன்னை வரச்சொல்லுவார்கள்.” "இல்லாவிட்டால் மீனாட்சி என்னையாவது அனுப்பி விடுங்கள் என்று வற்புறுத்துகிறாள். நாங்கள் புறப்பட்டுத்தான் ஆக வேண்டும். அவள் மூட்டை எல்லாம் எடுத்து வைத்து விட்டாள்.” இவ்வாறு மாணிக்கமும் அவன் தாயும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பார்வதி. "என்ன அண்ணா! அம்மாவை விட்டுவிட்டு இப்போது போகிறாயே. அவர்களை நீதானே காப்பாற்ற வேண்டும்.” "பார்வதி! அவனைத் தடுக்காதே. மருமகன் மாமனார் வீட்டிற்குச் சென்று வாழ்க்கைப் படட்டும்.” இச்சொற்கள் அவன் காதில் சுருக்கென்று தைப்பது போல இருந்தது. எதிர்த்துப் பேசி ஆகும் செயல் ஒன்றும் இல்லை என்று அவன் அனுபவம் அறிவுறுத்தியது. "அம்மாவுக்கு உடம்பு சரியாகப் போய்விடும். வேளா வேளைக்குக் கஷாயம் போட்டுக் கொடு. அப்பா இருக்கிறார். பார்த்துக் கொள்வார். நான் என்ன செய்ய முடியும்? அவள் தான் விடாப் பிடியாக இருக்கிறாளே! அவளை மட்டும் அனுப்பினால் அவர்தான் என்ன நினைத்துக் கொள்வார். கூப்பிட்ட கடிதத்திற்குப் போகவில்லையே என்று கோபித்துக் கொள்ள மாட்டாரா...? அனாவசியமாக அவர் விரோதத்தை ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.? நான் மட்டும் இங்கு இருந்து என்ன செய்யப்போகிறேன்...? நான் என்ன வைத்தியப் படிப்பா படித்திருக்கிறேன். அம்மாவுக்கு மருந்து கொடுக்க” என்று பார்வதியிடம் சொல்லிய வண்ணம் தன்பெட்டியை எடுத்து வெளியே வைத்தான். மழையின் சிறு துரல் வெளியே கொட்டுவது போல இருந்தது அவன் பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/157&oldid=898107" இலிருந்து மீள்விக்கப்பட்டது