பக்கம்:வழுக்கு நிலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ரா. சீனிவாசன் எல்லாம் பெரிய அதிர்ச்சிகளாக இருந்தன. கட்டை வண்டிகள் ஒன்றிரண்டு சென்று கொண்டு இருந்தன. கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் சுற்றிக்கொண்டு கிச்கிச் என்ற ஒலியொடு சிந்திய நெல்களைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தன. எருமை என்று தலை நிமிர்ந்து பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தது. சில, வேலை செய்யும் பெண்கள் வெற்றிலை பாக்குப் புகையிலையைப்போட்டு மென்ற வண்ணம் வயல் வெளியிலிருந்து வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர். அடுப்பில் இருந்து இறக்கி வைத்த காப்பியில் பாலை ஊற்றி ஆறவைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. சிவக்கொழுந்து முகத்தில் வியர்வைத் துளிகள் சில துளிர்த்தன. ஆற்றிய காப்பியைக் குவளை ஒன்றில் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். "அம்மா! காப்பி கொண்டுவந்து வைத்திருக்கிறேன்.” "அண்ணன் போய் விட்டானா?” என்று மூடிய தன் கண்களைத் திறந்து கேட்டாள். "நான் பார்க்க வில்லையம்மா. தெருவில் வண்டியில்லை. அண்ணி வீட்டில் இல்லை." "போகட்டும். அவன், அங்கேயாவது நிம்மதியாக வாழட்டும். அவன் என்ன செய்வான். வந்தவள் அவனை இங்கே வைத்து வாழ்ந்தால் தானே. அவனிடத்தில் அவள் அன்பாக இருக்கிறாள். அது போதும்" என்று மிகவும் தாழ்ந்த குரலில் பேசி ஆறுதல் பெற முயன்றாள். அப்பொழுதுதான் தாயின் உள்ளம் இன்னது என்று பார்வதியால் உணர முடிந்தது. அண்ணன் மீது அம்மா கொண்டிருந்த அன்பு அப்பொழுதுதான் நன்றாகப் புலப் பட்டது. "எல்லாம் என் தவறுதான்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டு மேலே தொடர்ந்து பேசாமல் நிறுத்திக் கொண்டார் அவள் தகப்பனார். "தெருவில் தபால்காரர். ஏதோ ஒரு கடிதம் போட்டு விட்டுச் சென்றது அவர் கண்களை ஈர்த்தது. உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து வெளியே எழுந்து சென்றார். "என் உடம்பு இந்தமாதிரி இருந்தால் நான் பிழைக்க மாட்டேன். மார்பில் அவ்வப்போது வலி அதிகமாக இருக்கிறது. உடம்பெல்லாம் ஒரே வலியாக இருக்கிறது" என்று சொல்லி விட்டு ஊற்றி வைத்த காப்பியை எடுத்துக் குடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/160&oldid=898116" இலிருந்து மீள்விக்கப்பட்டது