பக்கம்:வழுக்கு நிலம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 159 படுக்கையை விட்டு மெல்ல எழுந்திருக்க முயன்றாள். முகத்தில் சில வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. "பட்டணத்திலிருந்து கடிதம் வந்திருக்கிறது” என்று ஆர்வம் நிறைந்த குரலில் அவர் அறிவிப்பு அமைந்திருந்தது. பார்வதியின் விழிகள் அந்த எழுத்துக்களைக் கவனித்தன. அது அவர் எழுந்து அல்ல என்பதை உணர்ந்தாள். அதில் அவளுக்கு ஆர்வம் தோன்றவில்லை. பார்வதியின் தாயின் கண்களில் சிறிது ஒளி தோன்றியது. "என்ன எழுதியிருக்கிறான் மருமகன்?" "மருமகன் எழுதவில்லை.” மறுபடியும் அவள் கண்கள் அந்தப் புத்தொளியை இழந்தன. "அவன் குடியிருக்கிற வீட்டுக்காரர் எழுதியிருக்கிறார்." பார்வதியின் பார்வையில் அச்சமும் வியப்பும் கலந்திருந்தன. "சிவராமனுக்கு உடல் நலம் சரியாக இல்லை. நீங்கள் உடனே உங்கள் மகளை அனுப்பி வைக்க வேண்டியது." சட்டென்று மயக்கம் வந்து பார்வதி கீழே விழுந்து விட்டாள். பார்வதியின் தாயின் முகத்தில் பீதி கலந்து இருந்தது. தலைமயிர் பரவிக் கிடந்தன. படுத்த படுக்கையி லிருந்து எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை. சிவக் கொழுந்துக்குக் கையாடவில்லை, காலாடவில்லை, மனம் ஒட வில்லை, என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அந்தக் கடிதத்தைக் கை நழுவ விட்டு விட்டுக் குவளையில் நீர் கொண்டு வந்து பார்வதியின் முகத்தில் தெளித்தார். கண்களை மெல்லத் திறந்தாள். அவள் இருதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. குவளையில் எஞ்சியிருந்த நீரைக் கொடுத்துக் குடிப்பித்தார். அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் முன்பக்கம் நனைந்திருந்தது. அவள் மெலிந்த கண்களில் இரத்த ஒட்டம் இல்லாமல் வெளிறி இருந்தன. சுய நினைவுக்கு வரச் சிறிது நேரம் பிடித்தது. "நான் போகிறேன்” பா! நீங்கள் அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” "இடிமேல் இடிவிழும் என்று எதிர் பார்க்கவில்லை. பட்ட காலிலே படும்." "இந்தப் பழமொழி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். குழந்தை போகட்டும். அங்கே போய் அவரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/161&oldid=898118" இலிருந்து மீள்விக்கப்பட்டது