பக்கம்:வழுக்கு நிலம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ரா. சீனிவாசன் கவனிக்கட்டும். அவருக்கு உடம்பு என்னமோ ஏதோ, அவர் நல்லாயிருந்தால் போதும்." அவர்கள் பேசும் பேச்சைப் பார்வதி ஒன்றும் பொருட் படுத்தவில்லை. சாதாரண நூல் சேலை ஒன்றைக் கட்டிக் கொண்டு நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு கூடத்தில் இருந்த சுவாமி படத்தின் முன்னால் நின்று மனத்தை ஆறுதல் செய்து கொண்டு சிறு பையில் நாலைந்து சேலைகளை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டாள். "வர்ரேன் பா. அம்மாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்." "ஒண்டியா எப்படியம்மா போக முடியும்? மரகதத்தை யாவது துணைக்கு அனுப்பட்டுமா?" "அவள் குழந்தை குட்டிக்காரி. அவள் எப்படிப் பட்டணத்திற்கு வர முடியும்? பஸ் நிலையம் வரையில் துணைக்கு வரட்டும். நான் ஒண்டியாகப் போக முடியும். பயம் இல்லை.” வீட்டில் இருந்த பத்து ரூபாயை வழித் துணைக்கு எடுத்துக்கொண்டாள். மறுபடியும் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அம்மாவின் முகத்தில் கொஞ்சம் தெம்பு ஏற்பட்டதை அவளால் கவனிக்க முடிந்தது. "என்னமோ அவர் உடம்பு குணமாகி உன்னை நல்லபடி வைத்திருந்தால் அதுவே போதும்" என்று அந்த அம்மாவின் இறுதிச் சொற்கள் அவளை வழி கூட்டி அனுப்பின. அவரே ஏன் கடிதம் எழுதவில்லை? என்ற இந்தச் சந்தேகம் பார்வதிக்கு வரத் தொடங்கியது. கடிதம் எழுதும் நிலையில் இல்லாமல் அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறாரா! அந்த எண்ணம் அவளுக்கு அச்சத்தைத் தந்தது. இல்லை, வைராக்கியத்தால் எழுதாமல் விட்டு இருப்பார். இந்த எண்ணம் அவளுக்கு ஆறுதல் அளித்தது. சிவக்கொழுந்து சிறிது தூரம் வந்தார். மரகதம் பையை எடுத்துக் கொண்டு வழித்துணையானாள். வழக்கமாகப் பார்க்ககும் சகுனம் ஒன்றும் தீமையாகக் காணப்படவில்லை என்பது சிவக்கொழுந்துக்குத் திருப்தி அளித்தது. பார்வதி போனதும் வீடு வெறிச் சென்று ஆகிவிட்டது. போர்வை போர்த்திக் கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டாள் தாய். கழுவி வைக்காமல் சில பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. வாசலில் கட்டப்பட்டிருந்த கொடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/162&oldid=898120" இலிருந்து மீள்விக்கப்பட்டது