பக்கம்:வழுக்கு நிலம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 161 கயிற்றில் பார்வதியின் சேலை உலர்ந்து கொண்டிருந்தது. நனைந்துவிட்ட ஜாக்கெட் காயவைக்கப்பட்டிருந்தது. பார்வதி இல்லாத வெறும் வீடு அவள் கவனத்திற்கு வந்து தனிமையை உண்டாக்க முயன்றது. "பஸ் வந்தது, ஏற்றிவிட்டு வந்தேன்” என்று சொல்லிய வண்ணம் சிறிது நேரத்திற்கெல்லாம் சிவக்கொழுந்து மறுபடியும் அந்தப் பழைய முக்காலியில் வந்து உட்கார்ந்தார். கழுவாத காப்பிப் பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டன. அடுப்பில் நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. வெந்நீரை எடுத்து வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தார். "ஊம், ஊம்" என்று இரண்டு துன்ப ஒலிகள் அவ்வன்பு மனைவியின் நோயினின்றும் பிறந்தன. "என்ன, வலி அதிகமாக இருக்கிறதா?" "இல்லை. உங்கள் எதிர்காலம் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. நான் போய் விட்டால் உங்களைக் கவனிப்பார் யார்? என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது." அந்தக் கிழவரின் இரண்டு கண்களிலும் நீர் தளும்பி நிறைந்தன. துன்பம் அவர் நெஞ்சத்தைக் கவ்வியது. உலகத்தில் தான் தனிமையாக நிற்பது போல் காணப்பட்டது. 23 கோடம்பாக்கம் கூட்டுச் சாலையில் இருந்த சிவராமனின் அறை மூடியிருந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாகப் பூட்டுப் போட்டிருந்தது. அந்த வீட்டின் பின் பக்கத்தில் இருந்த மாடு வைக்கோல் தின்று கொண்டிருந்தது. பக்கத்தில் வேப்ப மரத்தில் ஒரு சேங்கன்று கட்டப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் மாட்டுக்கு வைக்கோல் போட்டு விட்டு வந்த வீட்டுக்காரரின் பார்வை வெளியே மாடிக் கதவிலிருந்து இறங்கு வரும் பார்வதி மீது சென்றது. விரைவாக வந்து, "யாரது! என்று கண்டிப்பான குரலோடு கேட்டுக் கொண்டு வந்தார். "நான் தானுங்க. இவருக்கு உடம்பு எப்படியிருக்கிறது? இவர் எங்கே? ஆஸ்பத்திரியில் இருக்கிறாரா? என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/163&oldid=898122" இலிருந்து மீள்விக்கப்பட்டது