பக்கம்:வழுக்கு நிலம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ) ரா. சீனிவாசன் உடம்புக்கு?" என்று கவலையும் விரைவும் தோய்ந்த குரலில் கேட்டாள். "ஒகோ நீங்களா? நீங்கள்தானா பார்வதி அம்மாள்? அவருக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை. வாங்க நிதானமாப் பேசலாம்" என்று தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். "இங்கே வா! இவர்கள்தாம் அந்தப் போட்டோவில் இருக்கிறவர்கள். இந்தம்மாதான் சிவராமனின் மனைவி" என்று அங்கு இருந்த சுமார் நாற்பது வயதுடைய அம்மையாரிடம் அறிமுகப்படுத்தினார். அவ்வம்மையார் நாற்பது வயதானாலும்.நல்ல தெளிவான முகமும், பருமனான உடலும் கொண்டு விளங்கினார்கள். அநேகமாகக் குழந்தையில்லாத குடும்பமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் தோற்றம் தெரிவித்தது. கூடத்தில் நிறைய சாமி படங்கள் மாட்டப் பெற்றிருந்தன. "நான் வேண்டாம் என்று சொன்னேன். இவர்தான் கேட்கவில்லை” என்ற பீடிகையோடு ஆரம்பித்து, "உட்காருங்கள்' என்று வரவேற்றார்கள். வெள்ளிக் குவளையில் மோர் ஊற்றிக் கொண்டு வந்து வைத்தார்கள். "இது நம் வீட்டுப் பசுமோர், குடியுங்கள்" என்று அன்பாகச் சொன்னார்கள். "அவருக்கு உடம்பு எப்படி இருக்கிறது. நான் அவரைப் பார்க்க வேண்டும்" என்று ஆவலாய்த் துடித்தாள். "அது தான்'மா நான் சொல்ல வந்தேன். அவர் உடம்புக்கு ஒன்றும் இல்லை. இவர்தான் அப்படி எழுதி உங்களை அழைத்தார்." - அந்தச் சொற்களைக் கேட்ட அந்த வீட்டுக்காரர் அவர்கள் தாராளமாகப் பேசுவதற்கு உரிமை தருவதற்காக அந்த இடத்தை விட்டுத் தெருப் பக்கம் வந்தார். "ஏன்'மா, இந்தமாதிரி நீ ஊரிலே உட்கார்ந்து கொண்டிருந்தால் உன் புருஷன் கண்டவங்களோடு சுற்றிக் கெட்டுப்போக மாட்டாரா? இந்த மாதிரி தாய் வீட்டில் இருந்தால் அவர் தவறான வழியில் போவதற்குக் காரணமாக இருக்காதா?” பார்வதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன் கணவரின் நடத்தையைப் பற்றி அவர்கள் தவறு சொல்வது மட்டும் ஒரளவு விளங்கிற்று. "இதற்காகவா, இவர்கள் என்னை அழைக்க வேண்டும்" என்று சிந்தித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/164&oldid=898124" இலிருந்து மீள்விக்கப்பட்டது