பக்கம்:வழுக்கு நிலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 15 "அம்மா! கூடையைக் கொஞ்சம் பிடியுங்கள்." "இவ்வளவு பாரத்தை ஏன் சுமக்கிறாய். கொஞ்சமாக வாங்கி வருவதுதானே.” அந்தக் கூடை தலையில் ஒருவாறு தூக்கி வைக்கப் பட்டது. கழுத்திலிருந்த ஒரு மெல்லிய நரம்பு வெளியே தெரியும் வண்ணம் அந்தச் சுமையை அவள் தூக்கிச் சென்ற காட்சி அவள் மறைந்த பின்பும் மறையாத காட்சியாக அவள் உள்ளத்தில் பதிந்தது. "எல்லாம் வயிற்றுக்குத்தான்" என்று அவள் சொல்லிய இறுதிச் சொற்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பன போல் இருந்தன. "பார்வதி! பார்வதி!" என்று கூப்பிடுங் குரல் கேட்டு அந்த முள்ளங்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் போனாள். "இது எல்லாம் உனக்கு வாங்கத் தெரியுமா? எப்படிப் பழகிக் கொண்டாய்?" "எல்லாம் தானாகப் பழக்கமாய் விடுகிறது அக்கா!" "அதுக்குத்தான் ஒரு மாமியார் இருக்க வேண்டும் என்பது உன்னால் எப்படிக் குடித்தனத்தைக் கவனித்துக் கொள்ள முடியும். கஷ்டம்தான். என்ன செய்வது. நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். எங்கள் அம்மா இருந்தால் உனக்கு இந்த மாதிரி வேலை யெல்லாம் இருக்காது." சிவராமனின் தாயாரின் படம் மங்கலாகக் காட்சியளி துக் கொண்டிருந்தது. அதைத் துடைத்துப் பல மாதங்கள் ஆனது போல் மங்கிக் கிடந்தது. அதற்குப் பக்கத்தில் மீசையை முறுக்கி விட்டுச் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டிருந்த அவன் தந்தையாரின் படமும் அதைப் போலவே துடைப்பாரற்று மாட்டிக் கிடந்தது. "இப்படிக் கொடு நான் அரிந்து கொடுக்கிறேன்." பார்வதி அரிசி எடுக்க உள்ளறைக்குச் சென்றாள். அங்கே கண்ணாடியின் முன்னால் சிவராமன் தலைவாரிக் கொண்டு நின்றான். அவன் அணிந்திருந்த நீல நிற 'டை அவன் சிவப்பு முகத்திற்கு அழகு கொடுத்தது. அவன் கிராப்புப் பின் பக்கமாகத் தள்ளிக்கொண்டு வாரிக்கொண்டிருந்தான். ஒருசில மயிர் படியாமல் இருந்ததால் வாசலைன் பூசிப் படிய வாரிக் கொண்டிருந்தான். அப்படியும் அவனையும் எதிர்த்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/17&oldid=898136" இலிருந்து மீள்விக்கப்பட்டது