பக்கம்:வழுக்கு நிலம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 Q Јт. சீனிவாசன் ஏன் வந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது என்ற எண்ணம் அவளிடம் நிலைபெற்றது. எப்படி அவரிடம் முதலில் பேசுவது, பழையபடி பணத்தைக் கேட்டால் என்ன செய்வது என்பதுபற்றிச் சிந்திக்கலானாள். மாலை, மணி ஆறாகியும் சிவராமன் வீட்டுக்கு வரவில்லை. இவள் கற்பனை அந்த மோகினித் தெய்வத்தின் மீது சென்றது. எப்படியும் அவள் பின்னால்தான் சுற்றிக் கொண்டிருப்பார் என்று அவள்மனம் அவரைப் பின்சுற்றிக் கொண்டு இருந்தது. வெளியே செருப்பு ஒலி கேட்டது. மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது. ஒரு வேளை அவரோடு அந்த மோகினித் தெய்வம் வருகிறாளா என்ற அச்சத்தால் அவள் விழிகள் அவனைப் பின் தொடர்ந்து பார்த்தன. மனம் திக், திக் என்று அடித்துக் கொண்டது. அவன் நிழலைத் தவிர வேறு யாரும் அவனைப் பின் தொடரவில்லை யென்பது அந்த மின்சார விளக்கு வெளிச்சத்தில் அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. டக் என்று கதவு மூடிய சப்தம் கேட்டது. 24 சிவராமன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தான். உட்கார்ந்திருந்த நாற்காலியின் எதிரே அவன் மாட்டி வைத்த படம் இருந்தது. இவன் விழிகள் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. பார்வதியின் அமைதியான கண்கள் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. இவன் அந்த விழிகளின் வழியாக அவள் உள்ளத்தை அளந்து கொண்டிருந்தான். வெளியே சிறு தூரல் தூரிக்கொண்டிருந்தது. வானத்தில் இடியும் மின்னலும் கலந்து ஒலித்து ஒளித்துக் கொண்டிருந்தது. மினுக் மினுக் என்று அவ்வப்போது உள்ளே வெளிச்சம் திடீர் திடீர் எனத் தோன்றிக் கொண்டிருந்தது. வெளியே ஒரு விளக்கு விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. மழைத் துளிகள் விட்டு விட்டு அந்த வெளிச்சத்தில் காட்சியளித்தது. புல்லினின்றுவிழும் பணித் துளிகளைப் போல அந்த விளக்கைச் சுற்றியிருந்த மூடியிலிருந்து விட்டு விட்டுச் சில மழைத்துளிகள் விழுந்து கொண்டு இருந்தன. சளசள வென்ற சப்தம் அவ்வப்போது சென்ற கார்களால் ஒலித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/170&oldid=898138" இலிருந்து மீள்விக்கப்பட்டது