பக்கம்:வழுக்கு நிலம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 169 கொண்டிருந்தது. அவன் இருந்த அறையிலிருந்து இந்தக் காட்சி களைக் காண மூடிந்தது. அவன் மேஜையின் முன்னால் கிழிக்கப்பட்ட கவர் ஒன்று இருந்தது. அதில் ஒரு கடிதம், படித்த பின் மீண்டும் வைக்கப்பட்டு இருந்தது. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிரண்டு அலங்கோலமாய்க் கிடந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் மழை நின்று அமைதியாக இருந்தது. மழையின் காரணமாகப் போக்குவரத்துக் குறைவாக இருந்ததால் தெருவிலும் அமைதி குடிகொண்டிருந்தது. அவன் மனமும் மழைக்குப்பின் காணும் அமைதியைப் போலக் குழப்பத்திற்குப் பின் தெளிவு பெற்றிருந்தது. வெளியே கதவு தட்டும் சப்தம் கேட்டது. எதிர்பார்த்த ஒருவரை வரவேற்பதைப் போல வேகமாகச் சென்று கதவை மெல்லத் திறந்தான். பார்வதி தலைகவிழ்ந்து நின்றாள். அவளுக்குப் பக்கத்தில் வேறு யாரும் இல்லை. "வா பார்வதி.! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்." நடப்பது அனைத்தும் உண்மை தானா? என்று அவள் உள்ளம் எண்ணியது. விண்ணிலே மிதக்கும் வெண்முகில் போல இலேசாக இருந்தது அவள் மனம். பேசாமல் உள்ளே சென்றாள். சிவராமன் உட்தாட்பாள் போட்டான். அந்த அறையிலிருந்த சாமான்களை வேகமாக அளக்கத் தொடங்கின அவள் கண்கள். சுவரில் பழைய படம் அவள் கண்களுக்குத் தெரிந்தன. வீடு பெருக்காமல் துரசும் துப்புமாக இருந்தது. "எப்படித் தெரியும் நான் வருவேன் என்று...?” 'தெரியும். உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வீட்டுக்காரர் கட்டாயம் உன்னை வர வழைத்து விடுவார் என்று எனக்குத் தெரியும்." "அவர் உங்களிடம் சொன்னாரா?” "இல்லை. இருந்தாலும் இரண்டு, மூன்று நாட்களாக அவர் பேசாமல் இருந்தது கண்டு தெரிந்து கொண்டேன். நானும் இங்குத் தங்க வேண்டுமானால், இந்த வீட்டை விட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/171&oldid=898140" இலிருந்து மீள்விக்கப்பட்டது