பக்கம்:வழுக்கு நிலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 17 "ஆமாம். அவள் அப்பாகூட எவ்வளவோ முயற்சி செய்தார். பரீட்சைத்தாள் எங்கெங்கே போயிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குச் சென்னைக்குக் கூட வநதிருந்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை." "நான் அந்த முயற்சியைச் சொல்லவில்லை. படித்தால் பாஸ் ஆகலாமே என்று சொன்னேன்." "ஆங்கில பாடத்தில்தான் ஒவ்வொரு முறையும் தோல்வி ஏற்படுகிறதாம். இனிமேல் முடியாது என்று தீர்மானம் செய்து விட்டாளாம்.” 'போகட்டும். அதிகமாகப் படித்தால் கூடக் குடும்பத்திலே அடக்க ஒடுக்கமாக எங்கே குடித்தனம் செய்யப் போகிறார்கள்." படிக்காவிட்டால் கூட ஒரு சிலர்க்கு அடக்கம் என்பது இருப்பது இல்லை என்று சொல்லவந்தவள் ஒருகால் அவர்களையே சுட்டுவதாகக் கொண்டால், தவறாக நினைத்துக் கொள்வார்களே என்று சொல்லாமல் நிறுத்தி விட்டாள். "அந்த இடம் பெரிய இடமாயிற்றே என்றுதான் எங்கள் அப்பா கொஞ்சம் அச்சப்படுகிறார்." 'அதற்கென்ன உங்கள் அப்பா கெட்டிக்காரர். எப்படியாவது முடித்துவிடுவார்.” 'அப்பா கெட்டிக்காரர்' என்ற சொற்கள் பார்வதிக்கு எட்டிக்காய் போல் இருந்தன. அந்தக் கெட்டிக்காரத்தனத்தால் தானே தன் கணவருக்குத் திருமணம் ஆனபிறகு கொடுக்கிறேன் என்று சொன்ன பத்தாயிரத்தைக் கொடுக்க வில்லை என்ற நினைவு பார்வதிக்கு வந்தது. உலகத்தில் கெட்டிக்காரத் தனத்தாலேயே எதையும் சாதித்து விடமுடியும் என்று நினைப்பது தவறு என்று அவள் மனம் சொல்ல ஆரம்பித்தது. அதற்குள் வெளியே ஒர் ஆள் வந்து நின்றான். சைக்கிளில் வந்திருக்கிறான் என்பது அவன் அடித்த மணியிலிருந்தே தெரிய வந்தது. "ஐயா இருக்கிறாரா?" என்று நிரம்ப மரியாதையோடு கேட்க ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/19&oldid=898150" இலிருந்து மீள்விக்கப்பட்டது