பக்கம்:வழுக்கு நிலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ரா. சீனிவாசன் "இந்தத் தட்டுகளை யெல்லாம் கழுவி வை" என்று அடுக்களையிலிருந்து உத்திரவு வந்தது. சில தட்டுகளையும் கிண்ணங்களையும் துலக்கிக் கழுவி வைத்தாள். அந்தப் பொட்டலத்திலிருந்த புடவையைப் பார்க்க வேண்டும் என்ற சின்ன ஆசை ஒன்று அவள் உள்ளத்தில் தோன்றியது. ஆனால் அந்த ஆசைக்கே இடம் வைக்காமல் அந்தச் சேலையைப் பிரித்துப் பார்க்காமலேயே அவள் பெட்டியில் வைத்துவிட்டதைப் பார்த்து அந்த எண்ணத்தையும் கைவிட்டு விட்டாள். "தம்பிக்கு முட்டை ஆம்லெட்' என்றால் நிரம்பவும் பிரியம்" என்று சொல்லிக்கொண்டு சில முட்டைகளை உடைத்துக் கிண்ணத்தில் ஊற்றத் தொடங்கினாள். "அம்மாவை விடாப் பிடியாகத் தொந்தரவு செய்வான். அவளும் இதெல்லாம் செய்து வைப்பாள். அருமை அறிந்து நடந்து கொள்வதுதான் பெண்களுக்குப் பெருமை" என்று சொல்லிக்கொண்டே வெங்காயம் அறுத்து ஒரு கிண்ணத்தில் போட்டாள். "எங்களவர் இப்படி யெல்லாம் கேட்டுச் சாப்பிடமாட்டார். போட்டதைச் சாப்பிட்டு விட்டுப் பேசாமல் எழுவார்" என்று வழக்கம் போல் தன் கணவரின் பெருமையைக் கொஞ்சம் அளந்து பேசினாள். "எண்ணெய் அவன் உடம்புக்கு ஆகாது. நெய் கொண்டு வா” என்று சொல்லி அவளே அங்கிருந்த நெய்ப் பாத்திரத்தில் இருந்த நெய்யைக் கடாயில் கொஞ்சம் ஊற்றினாள். பார்வதி அழுவதா படுக்கையிலாவது போய் விழுவதா என்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்து இருந்தாள். ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாறுதலை எதிர்பார்க்கவில்லை. தனக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவதற்கோ யாரும் இல்லையே என்ற ஒரு சிறு வருத்தம் அவள் உள்ளத்தில் இடம் பெற்றது. சிவராமன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். "அக்கா! சமையல் ஆகிவிட்டதா?’ என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் வந்தான். "உட்காரு' என்று சொல்லித் தடடைக் கழுவி வைத்தாள். அங்கே நிற்பதா கூடாதா என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றாள் பார்வதி. சிவராமன் தன்னிடம் வெறுப்பாக நடந்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/24&oldid=898160" இலிருந்து மீள்விக்கப்பட்டது