பக்கம்:வழுக்கு நிலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ரா. சீனிவாசன் அவ்வளவு உரிமையாவது கிடைத்ததே என்ற திருப்தி யோடு அவள் சமையலறைக்குச் சென்றாள். சாப்பிட்டது குறைவாக இருந்தபோதும் நேரம் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே ஆயிற்று. வேறு வேலை இன்னது செய்வது என்று தெரியாத காரணத்தால் அதிலேயே கொஞ்ச நேரம் போககுபவளைப் போல மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். "அக்கா! வருகிறேன். ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்" என்று அவன் குரலும் வெளிக்கதவு சாத்தும் சப்தமும் ஒன்றாகக் கேட்டது. வெளியே கூடத்தில் பெட்டியில் வைத்திருந்த புடவையின் அழகை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'வயலட் நிறத்தில் ஒரமில்லாமல் அழகாக இருந்த அந்தப் புடவை பார்வதியின் கண்களைக் கவர்ந்தது. தண்ணிர் குடிக்கச் செல்வதைப் போல அந்தப் புடவையைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதற்காக அடுப்பங்கரையை நோக்கி அந்தக் கூடத்தின் பக்கம் வந்தாள். நல்ல காலமாகப் பிரித்த புடவையை மடித்து வைக்கப் பார்வதியின் உதவி தேவையாக இருந்தது. "பார்வதி இதைக் கொஞ்சம் பிடி" அதன் மென்மையான தன்மையைத் தொட்டு உணர முடிந்தது. அதன் நீலநிறம் வானத்தின் நீலத்தைப் போலக் களங்கமில்லாமல் விளங்கியது. மங்கலாக இல்லாமல் பளிச்சென்று இருந்தது. விளக்கொளியில் இன்னும் அது எடுத்துக் கொடுத்தது. "இது உன் மாநிறத்துக்கு எடுக்காது" ஆமாம் என்று சொல்லுவதா மறுத்துப் பேசுவதா என்று பார்வதியின் மனம் விரைவில் முடிவுகட்ட முடியாமல் திண்டாடியது. சும்மா இருப்பது நல்லது என்ற சித்தாந்தத்திற்கு வந்தவளைப் போல் ஒன்றும் பதில் பேசாமல் இருந்து விட்டாள். தண்ணிர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் மறுபடியும் தன் உள்ளறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். தலையணையின் மீது தலை வைத்துப் படுத்தாள். அவளுக்குத் துக்கம் வரவில்லை. அப்பா பணம் கொடுக்காதது தன்னுடைய தவறா என்று சிந்திக்கத் தொடங்கினாள். அவர் இந்த வேளையில் எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/26&oldid=898164" இலிருந்து மீள்விக்கப்பட்டது