பக்கம்:வழுக்கு நிலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ரா. சீனிவாசன் எனக்கு உரிமை கிடையாதா என்றெல்லாம் அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. "அக்கா" என்று குரல் கொடுத்தது கேட்டது. அவன் தமக்கை எழுந்த பாடிலலை என்பது மீண்டும் மீண்டும் கதவு தட்டுவதிலிருந்து தெரிந்துகொண்டாள். போகலாமா வேண்டாமா என்று அவள் மனம் இப்படியும் அப்படியுமாக இருந்தது. மீண்டும் கதவு தட்டும் ஒலி கேட்டுக் கதவைத் திறந்தாள். சிவராமன் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்து உள்ளறையில் படுக்கச் சென்றாள். அவன் தன் அறையில் தங்கி விட்டதை அந்த அறையின் சன்னல்கள் திறந்து வைத்ததிலிருந்து தெரிந்து கொண்டாள். மறுபடியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில் நல்லிரவு தலையணை அவள் கண்களில் பட்டன. அந்த எழுத்துக்கள் கண்களில் படாமலிருக்க அதை எடுத்து வீசி எறிந்துவிட்டு வலிய தூங்க ஆரம்பித்தாள். “ss ன் சாமி இரண்டு மாதமாக இழுத்தடிக்கிறீர்கள். இது நியாயந்தானா?” என்று நீதிபதியின் முன்னால் நியாயம் எதிர்பார்க்கிற குற்றவாளி கூட இவ்வாறு கேட்க மாட்டான். அது நியாயமில்லை என்பது தெரிந்துகொண்டு தான் இவ்வாறு கேட்டான். வேறு இதைவிடக் கடுமையான சொற்களைச் சொல்ல முடியாதபடி அவன் நா அடக்கத்தை மேற் கொண்டது. இவ்வாறு கேட்பது பால்காரனின் பழகிய குரலாக இருந்தது. "என்ன சாமி! இந்த மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் இழுத்தடித்தால் நான் மாட்டுக்குப் பிண்ணாக்கு வாங்க முடியுமா வைக்கோல் வாங்கித் தீனிபோட முடியுமா இது எல்லாம் நன்றாக இல்லை" என்று மேலும் அடுக்கிக் கொண்டே பேசிய சொற்கள் காதில் ஒலித்துக் கொண்டி ருந்தன. பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். சூரியனின் கதிர்கள் சன்னல் வழியாக நுழைந்து வீட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் ஒளி பரப்பி இருளைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/28&oldid=898166" இலிருந்து மீள்விக்கப்பட்டது