பக்கம்:வழுக்கு நிலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ( ரா. சீனிவாசன் பார்வதி வெளியே வந்தாள். என்ன வேலை இருக்கிறது செய்வதற்கு என்ற சிந்தனையில் சுறுசுறுப்பில்லாமல் வெளியே வந்தாள். "மணி எட்டாகிறது. இப்பொழுது எழுகிறாய். வீடு குட்டிசசுவர் ஆனாற் போலத்தான்" என்று அடுக்கு மொழியில் அளந்துகொண்டே யிருந்தாள். "எழுந்து நான் என்ன செய்வது?" என்று துணிவாகக் கேட்டாள் பார்வதி. "பார்த்தாயாடா எதிர்த்துப் பேசுவதை! பெரியவர்கள் சின்னவர்கள் என்பதை மறந்து பேசுகிறாள்." "எழுந்து கூடமாட வேலை செய்வது. இந்த வீட்டு எசமானி ஆகிவிட்டாய் என்ற திமிரா? எழுந்து நான் என்ன செய்வது என்று கேட்க அவ்வளவு துணிச்சலா? ஏன் சும்மா இருக்கிறீர்கள் இதைப்போலக் கேளுங்கள்' என்று தமக்கைக்குச் சிவராமன் வழி சொல்லிக் கொடுப்பதைப் போல் இந்தப் பேச்சில் சுவை காணத் தொடங்கினான். "ஆமாம். துணிச்சல்தான்; எல்லாம் நீ கொடுத்த அதிகாரம் தான். நானும் பார்க்கிறேன். நான் வந்த நாளாக முகத்தில் சிடுசிடுப்பைத் தவிர கலகலப்பில்லை. வாய்விட்டுச் சிரித்து நான் பார்க்கவில்லை. மனம்விட்டுப் பேசி நான் கேட்கவில்லை. நான் என்ன உங்கள் வீட்டுச் சோற்றுக்கு வந்தேனா? துணிக்கு வந்தேனா? அப்படித்தான் திக்கற்று வந்துவிட்டால்கூட இவளிடத்தில் ஒரு நாள்கூடக் குப்பை கொட்டமுடியாது” என்று முகாரி ராகத்தில் வசை மாறி பொழியத் தொடங்கினாள். "சீ கழுதை வாயை மூடு" என்று வாயை மூடிக் கொண்டிருந்த பார்வதியை நோக்கிச் சீறினான். பார்வதியால் இனி அடங்கிக் கிடக்க முடியவில்லை. "நான் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது. உங்களிடத்தில் எனக்கென்ன வருத்தம் இருக்கிறது. அவர் என்னிடத்தில் காரணமில்லாமல் கோபம் கொண்டு நடந்து வருகிறார். அதற்குத்தான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் சிரித்து மகிழக்கூடிய வாழ்வு எனக்கு இப்பொழுது இல்லை. அதனால் நான் அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது. நான் செய்து வந்த வீட்டு வேலைகளையும் என்னைச் செய்ய விடாமல் நீங்களே செய்து வருகிறீர்கள். அதனால்தான் எழுந்து நான் என்ன செய்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/30&oldid=898172" இலிருந்து மீள்விக்கப்பட்டது