பக்கம்:வழுக்கு நிலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 29 என்று கேட்டேனே தவிர உங்களிடத்தில் நான் ஏன் வருத்தம் கொள்ளப் போகிறேன். விருந்தினராக வந்த உங்களிடத்தில் நான் ஏன் வம்பு வைத்துக் கொள்ளப் போகிறேன்.” "நானா விருந்தினள். பார்த்தாயாடா! இன்று வந்து நாளைக்குப் போகிறவளிடத்தில் எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லுகிறாள். இதுதானே அவள் கருத்து ! வேண்டாம். இப்பொழுதே அவருக்கு ஒரு தந்தி கொடு. இனி அரை நாழிகையும் இந்த வீட்டில் தங்கமுடியாது. என்னை விருந்தினர் என்று சொல்லிப் பிரித்து வைத்து விட்டாள். நேற்று வந்தவளுக்கு இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்தது. என்ன இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நீ சும்மா இருக்கிறாய்." "இல்லை. சிகரெட்டு வாயில வைத்திருக்கிறேன். எப்படி நான் பேசுவது? சிகரெட்டைப் பிடித்து முடித்து விட்டுப் பிறகு கருத்துரை வழங்குகிறேன்" என்று சாவதானமாகப் புகையை விட்டுக் கொண்டிருந்தான். அதன் சாம்பலைத் தட்டிவிட்டுத் தன் தலைமைப் பேச்சை முடிக்கத் தொடங்கினான். "ஆகவே, இரண்டு பேச்சாளர்களும், மிகச்சிறந்த முறையில் பேசினர்கள். கருத்துப் பஞ்சமும் சொல்வளமும் நிறைந்த உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சைக் கேட்டுப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தப் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கூட்டத்திற்குத் தலைமை வகித்த நானே பொதுமக்களின் வாரிசாகவும் இங்கே உட்கார வேண்டியதாக ஏற்பட்டது. செயலாளர் இல்லாத காரணத் தால் இங்கே பேச்சில் கலந்துகொண்ட பேச்சாளர்களுக்கும் தலைவர் அவர்களுக்கும் என் மனப்பூர்வமில்லாத நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு கூட்டத்தை இனிது முடிக்கிறேன்.” "ஏன் கைதட்டாமல் சும்மா கேட்டுக்கொண்டிருக் கிறீர்கல்” என்று சிறிது உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான். பார்வதி அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினாள். சே! இவ்வளவு பேச்சு வளர்ந்ததற்குத் தான் காரணமாக இருக்கக்கூடாது என்று எண்ணிய வண்ணம் அந்த இடத்தை விட்டுப் புழக்கடைக்குப் போய் கிணற்றிலிருந்த நீரை இழுத்துத் தொட்டியில் நிரப்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/31&oldid=898174" இலிருந்து மீள்விக்கப்பட்டது