பக்கம்:வழுக்கு நிலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ( ரா. சீனிவாசன் கொண்டிருந்தாள். பிறகு, செடிகளுக்கு அந்த நீரை ஊற்றத் தொடங்கினாள். "ஏன் அக்கா! அவள் சின்னவள், அனுபவமில்லாதவள். அவள் சொல்லுவதற்கு நீ வருத்தப்படலாமா. அவளுக்கு உன்னிடத்தில் ஒருவித மனக்குறைவும் இல்லை" என்று சாவதானமாகப் பேசிக்கொண்டிருந்த சொற்கள் பார்வதியின் காதில் பட்டன. . பார்வதி தோட்டத்தில் தொட்டிகளில் இருந்த செடிகளுக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டிருந்தாள். உலர்ந்த தன் நெஞ்சில் யாரோ குளிர்ந்த நீரை ஊற்றிக் குளிர்விப்பது போல் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அங்கே வந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் முப்பது நாட்கள் தங்கிவிட்டதைப் போன்ற பழமை அவன் தமக்கைக்குத் தோன்ற ஆரம்பித்தது. "நானும் சொன்னேன். அவரோடேயே வந்து விடுகிறேன் என்று. அவர் கேட்டால்தானே! அங்கே யாரும் உனக்குப் பேச்சுத் துணையிருக்க மாட்டார்கள். உன் தம்பி வீட்டில் கொஞ்சநாள் இரு என்றார். அவர் சொல்லாவிட்டால் நான் ஏன் வருகிறேன்” என்று பழைய பல்லவியை வேறு ராகத்தில் பாடினாள். ஆள் தலை காட்டாமல் ஒரு குரலும் கடிதமும் உள்ளே விழுந்தன. "தபால்” என்று சொல்லிவிட்டு ஒரு கடிதம் உள்ளே போட்டுவிட்டு அவன் வழக்கம் போல் அடுத்த வீடுகள் தேடி நடந்தான். - "பார்வதியின் பேருக்கு வந்திருக்கிறது." "எங்கிருந்து?" "எல்லாம் அவள் அப்பாவிடமிருந்து." இந்தச் சொல் மட்டும் தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த பார்வதியின் காதில் பட்டது. அந்தக் கடிதம் பார்ப்பதில் அவளுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. "இந்தா உங்கள் அப்பா எழுதி யிருக்கிறார்." கடிதத்தை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குப் போனாள். சிறிது நேரம் பொறுத்துச் சிவராமனும் உட்சென்றான். "என்ன ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/32&oldid=898176" இலிருந்து மீள்விக்கப்பட்டது