பக்கம்:வழுக்கு நிலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 31 ஒன்றும் பேசாமல் இருந்தாள். "சரி. அவன் வழிக்கு வரமாட்டான். நான் முடிவாகச் சொல்வது இதுதான். அந்தப் பணம் பத்தாயிரம் வரவில்லை என்றால் என்னால் குடித்தனம் செய்ய முடியாது. இறுதியாக எழுதிவிடு. பத்தாயிரம் தருவதாகச் சொன்ன சொல்லைக் காப்பாற்றச் சொல். இல்லையானால் உன்னை வைத்துக் கொண்டு காலத்துக்கும் காப்பாற்றச் சொல்." சிவராமன் வேலைக்குப் போனதும் தன் அப்பாவுக்குக் கடிதம் எழுதுவதற்குப் பார்வதி முனைந்தாள். 5 "நலம் தெரிவிக்கவும் என்று ஒவ்வொரு கடிதத்திலும் நீர் எழுதி வருகிறீர். உண்மையில் என் நலத்தில் உங்களுக்கு அக்கரை இருக்குமானால் பத்தாயிரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் என்னை வந்து அழைத்துப் போகவும்” என்ற பகுதியை எல்லோரும் கேட்குமாறு வாய்விட்டுப் படித்தார் பார்வதியின் தந்தை சிவக்கொழுந்து. "இந்தச் சிவக்கொழுந்தா இந்த மிரட்டலுக்குப் பயப்படுகிறவன். அவன் வைத்து வாழாவிட்டால் நான் ஹைகோர்ட்டுவரை போய் ஒருகை பார்த்துவிட மாட்டேனா !” "பார்த்து விடுவீர்கள். அப்பொழுதே நான் சொல்ல வில்லையா! உங்கள் திறமையெல்லாம் வியாபாரத்திலே காட்டுங்கள்; திருமணத்திலே காட்ட வேண்டாமென்று” "ஆமாம், ஆயிரம் பொய்சொல்லி ஒரு கலியாணத்தை நடத்தி வை என்பார்களே! நான் என்ன ஒரு பொய்தானே சொன்னேன்.” "சரிதான். நீங்கள் ஆயிரம் பொய்சொல்லியிருந்தால் நம்ம பெண்ணுக்குக் குழி தோண்டி வைக்க வேண்டியது தான். ஒரு பொய்க்கே இந்த நிலைமை என்றால் ஆயிரம் பொய் வேறு சொல்ல வேண்டுமா! சொல்லுவீர்கள்." "சரிதான்! அவன் கிடக்கிறான். அவன் சோறு போடா விட்டால் நம்ம வீட்டிலே கிடக்கிறாள். அவன் போடுகிற பிடிச் சோற்றுக்கு நம்ம ஆஸ்தியிலே பத்தாயிரம் அவனுக்குக் கொடுக்க வேண்டுமா? நாய் தின்று விட்டுப் போகுது அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/33&oldid=898178" இலிருந்து மீள்விக்கப்பட்டது