பக்கம்:வழுக்கு நிலம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ரா. சீனிவாசன் அவளுக்குப் போடுகிற சாப்பாடு. என்னமோ படித்த பையனாச்சே என்று பார்த்தால்.” "அதுதான் அவன் விடாப்பிடியாக இருக்கிறான். நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்?" "ஆமாம், நான் சொன்னேன். சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று. கலியாணம் ஆகட்டும்பா ஏதோ பார்த்துப் பெண் மேலே எழுதிவைக்கிறேன் என்று சொன்னேன். பத்தாயிரம் அவன் கேட்டான். சரிதான், பார்க்கலாம் என்று சொன்னால் அதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் அது அவன் தப்புதான். நாங்கள் கூட வியாபாரத்திலே எவ்வளவோ சொல்லுகிறோம். அப்படியே கொடுத்துவிட முடியுமா? பைத்தியக்காரப் பையன்!” "நீங்கள் கெட்டிக்காரர்தான். யாருக்குக் கொடுக்கப் போlங்க நம்ம பெண்ணுக்குத் தானே! அவன் மனசும் திருப்தியடையட்டுமே. அவனுக்குப் பணமா கொடுக்கா விட்டாலும் நம்ம பெண்மேலே ஏதாவது சொத்து எழுதி வைத்து விடுங்கள்." "பின்னே மகனைப்பற்றி உனக்கென்ன அக்கரை. மகளுக்கு எழுதிவைத்துவிட்டு நானும் என் மகனும் நடுத் தெருவில் நிற்கவேண்டியதுதான்.” "என்னப்பா! என்னையும் நடுச்சந்திககுக் கொண்டு வந்து விட்டீர்கள்" என்று சிவக்கொழுந்தும் அவர் மனைவியும் பேசிக்கொண்டிருந்த பேச்சின் இடையில் அவர்கள் மகன் மாணிக்கம் குறுக்கிட்டான். "எல்லாம் உன் தங்கையைப் பற்றித்தான்.” "என்னப்பா! தங்கை என்ன எழுதியிருக்கு." "பணம் பத்தாயிரம் அவள் அத்தானுக்கு எழுதி விட்டு நாம் நடுத்தெருவில் நிற்க வேண்டுமாம்." "என்னப்பா! ஏதாவது எழுதி வைத்து விடுவது தானே. அவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று தானே நாம் விரும்பவேண்டும்.” "அதற்கு நம் நிம்மதியைக் கெடுக்கவேண்டுமா?” "உலகமே அப்படித்தான்'.பா. ஒருவர் நிம்மதியாக வாழவேண்டுமானால் மற்றவர் நிம்மதி குலையவேண்டும். இருவரும் நிம்மதியாக வாழ உலகம் இன்னும் கற்றுக் கொள்ள வில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/34&oldid=898180" இலிருந்து மீள்விக்கப்பட்டது