பக்கம்:வழுக்கு நிலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 33 "சரிதான், வீட்டைப் பற்றிப் பேசு என்றால் உலகத்தைப் பற்றிப் பேசுகிறான்" என்று குறுக்கிட்டாள் அவன் தாய். "வீடுதான் உலகம். உலகம்தான் வீடு.” "தலைதான் வால், வால்தான் தலை. அதைப்பற்றி யெல்லாம் உன்னிடம் கேட்கவில்லை." "அப்பா! ஆண்பெண் இருவரும் இரண்டு கண்கள். ஒரு கண்ணைப் பாழாக்கிவிட்டு மற்றொரு கண்ணுக்கு ஒளி கொடுக்கலாம் என்பது தவறான எண்ணம். இரண்டு கண்களையும் ஒன்றாகவே கருதவேண்டும்." "சரிதான். தங்கள் அறிவுரை கேட்டு நடக்கவேண்டிய காலத்தில் தங்களைக் கூப்பிட்டுக் கேட்கிறேன். போய் உன் வேலையைப் பாரு" என்று சொல்லிவிட்டு அந்தக் கடிதத்திற்கு என்ன எழுதலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தார். "என்ன செய்வது. அவளும் கண்டிப்பாக எழுதியிருக் கிறாளே!" "ஆமாங்க ஏதாவது ஆறுதலாக எழுதுங்க. அதுவே இரவும் பகலும் கவலையாக இருக்குது. ஏதாவது செய்து கொள்ளப் போகிறாள்." "நான் மட்டும் அவனுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது. அதனாலே என்ன ஆனாலும் சரி! அவன் அவளை வைத்து வாழாவிட்டால் ஜீவனாம்சத்துக்கு வழி நான் தேடி வைக்கிறேன், அவளைப் போய் அழைத்துக் கொண்டு வந்து விட்டால் அவன் தானாக வழிக்கு வருகிறான்." இந்தத் தீர்மானத்துக்கு வந்தவராக அவர் தன் பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினார். {{ அதுவும் சரியான யோசனைதான். அங்கேயே விட்டு வைத்ததனால்தான் அவனும் அவளிடம் அது மாதிரி நடந்து கொள்கிறான்,' "அது மட்டுமில்லை. அவன் அக்கா வேறு அங்கே வந்திருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லிக்கொடுக்கிற பாடம் தான்.” "மாணிக்கம்! இதைத் தபாலில் போட்டு விட்டு வா." "இன்னும் இரண்டு நாளிலேநானும் பட்டணம் போகப் போகிறேன். தங்கையை அழைத்து வருகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/35&oldid=898182" இலிருந்து மீள்விக்கப்பட்டது