பக்கம்:வழுக்கு நிலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ரா. சீனிவாசன் "என்னப்பா! தங்கையை அழைத்துக் கொண்டு வரப் போகிறீரா, வேண்டாம். வாழ இருப்பவளைத் தாழச் செய்து விடாதீர்கள்." "நீ சும்மா இரு சில நாள் அவள் இங்குத் தங்கி இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்." அந்தக் கடிதத்தைப் போடுவதா வேண்டாமா என்ற சிந்தனையில் மாணிக்கம் ஆழ்ந்து விட்டான். 6 பொழுது போவது மிகவும் அரிதாக இருந்தது. திடீரென்று காலம் மெல்லப் போவது போல பார்வதிக்குத் தோன்றியது. திருமணம் நடந்து இங்கே வந்த நாட்களாகப் பொழுது மிகவும் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. மிக அதிகமாக வேகமாகக் காலம் சென்று விட்ட காரணத்தால் தான் காலதேவன் இப்பொழுது காலத்தை மெல்ல இயக்குவது போல் அவளுக்குத் தோன்றியது. 'காலண்டரில் இருந்த தேதி கிழிபடாமல் அப்படியே இருப்பது போல் தோன்றியது. அவளுக்கு வந்த மன எரிச்சலில் அதில்இருக்கும் காகிதங்களை யெல்லாம் மடமட என்று கிழித்துக் காலத்தைத் தள்ளி வைத்து விடலாமா என்று எண்ணினாள். கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதில் இருக்கின்ற முள்ளும் மெல்லவே அசைந்து சென்றது. கையாலாவது பிடித்துத் தள்ளி உதவலாமா என்று கைகள் துடித்தன. வெளியே பொழுதைப் பார்த்தாலும் அதுவும் மெல்லவே மாறுவதாக அவளுக்குத் தோன்றியது. மனம் எரிச்சலாக இருந்தது. அங்கே இருந்த பழைய பத்திரிகைகள் எல்லாம் படித்துப் பழகிப் போன பத்திரிகைகளாக இருந்தன. பேசுவதற்குத் துணை யாரேனும் கிடைப்பார்களா என்று அவாவியது அவள் உள்ளம். சண்டை போடுவதற்கு வேண்டுமானால் அவர் தமக்கை இருக்கிறார் என்ற எண்ணம் வந்தது. சும்மா இருப்பதைவிட சண்டையாவது போடலாமா ஏதாவது பேசி வம்புக்காவது இழுக்கலாமா என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்தது. அந்த வீடு முழுவதும் பார்த்துப் பழகிப் போன வீடாகக் காட்சியளித்தது. உயரமாக நின்றிருந்த பீரோவும் அதில் இருந்த கண்ணாடியும் எல்லாம் பழைய உருவங்களாகவே விளங்கின. கண்ணாடி முன்னால் நிற்கின்ற தன்னுருவமும் மிகப் பழகிய முகமாக இருந்தது. புதுமையற்று மிகவும் மந்தமாக விளங்கியது. களையிருந்த தன் முகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/36&oldid=898184" இலிருந்து மீள்விக்கப்பட்டது