பக்கம்:வழுக்கு நிலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ரா. சீனிவாசன் இல்லை. அவள் சொல்லியது தவறு என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. இல்லை. அவள் சொல்லத் தெரியாமல் சொல்லியிருக்கிறாள். நாகரிகமாகச் சொல்லி இருக்கிறாள். வாழ்க்கையின் தேவைகள் வெறும் உணவு மட்டுமில்லை. வயதுக்கும் சூழ்நிலைக்கும் மனித மனத்திற்கும் ஏற்றவாறு அவ்வப்பொழுது எழும் வேட்கைகளைத்தான் அவள் எல்லாம் வயிற்றுக்குத்தான் என்று சுருக்கமாகச் சொன்னாள். மனிதர் வாழாமல் இருக்க முடியாது. வாழ்வதற்கு அவ்வப்பொழுது தூண்டுதல்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. வயதுக்கும் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற தூண்டுதல்கள் உண்டாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சிலவற்றை வாய்விட்டுச் சொல்ல முடியும். சிலவற்றைச் சொல்ல முடியாது. அதைத்தான் அவள் நாகரிகமாக எல்லாம் இந்த வயிற்றுக்காகத்தான் என்பது அவளுக்குத் தெளிவாகத் தோன்றிற்று. - - சன்னல் அருகில் உட்கார்ந்தாள். கம்பிகளுக்கு வெளியே உலகம் இருந்தது. அங்கே சிட்டுக்குருவியொன்று சுற்றிச் சுற்றித் தன்னிச்சைபோலப் பறந்து சென்றது. வண்ணக்கிளி ஒன்று தன் இணைக்கிளியோடு வானில் பறந்து கண்ணுக்கெட்டாத் தூரத்திற்கு மறைந்து சென்றது. ஆனால் இந்த மனித இனத்தின் வேகம்தான் மெல்ல அசைவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அவள் சிந்தனையை அந்தச் சிட்டுக்குருவியைப் போலப் பறக்கவிட விரும்பினாள். ஆனால் அந்தச் சிட்டுக்குருவி போலப் பறக்காவிட்டாலும் அதைப் போலவே புறப்பட்ட இடத்திற்கே சுற்றிச் சுற்றி வந்தது. வெளியே சைக்கிள் மணியொன்று கேட்டது. அதோடு போஸ்ட் என்ற ஒலியும் கேட்டது. அடங்கியிருந்த மனம் ஆவலின் எல்லையை அடைந்து விட்டது. சட்டென்று சுறுசுறுப்புப் பிறந்தது. இரண்டில் ஒன்று என்ற திடசித்தம் ஏற்பட்டது. ஒன்று இங்கே இருந்து வாழ்வது. இல்லா விட்டால் அதைப்பற்றி எண்ணுவதற்குள் அவள் அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கினாள். மிக விரைவாக அவள் பார்வை அதன்மீது சென்றது. மேலே பார்வதி என்ற பெயர் இல்லாமல் இருந்தது. சிவகாமி என்ற பெயர் இருக்க அவள் சிந்தனை கலைந்தது. சிவராமனின் தமக்கைக்கு அவர் கணவர் பம்பாயிலிருந்து எழுதிய கடிதம் அது என்பது நிதானமாகப் பார்த்த பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/38&oldid=898188" இலிருந்து மீள்விக்கப்பட்டது