பக்கம்:வழுக்கு நிலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 37 தான் விளங்கிற்று. பம்பாய் முத்திரையும் அதில் பொறிக்கப் பெற்றிருந்தது. "என்ன! கடிதம் ஏதேனும் வந்ததா? என்று அதிகார அடிப்படையிலே அவன் பேச்சு எழுந்தது. "ஆம், கடிதம் ஒன்று வந்திருக்கிறது." "என்ன எழுதியிருக்கிறான் அந்த மடையன்?” "இந்தா" என்று நீட்டினாள் அந்தக் கடிதத்தை "என்ன எழுதியிருப்பார்; மகளே! நலம். நலம் தெரியபடுத்தவும். உன் நாத்தனார் எப்பொழுது வீட்டை விட்டு ஒழிவாள். எல்லாம் ரகசியமாகத் தான் எழுதியிருப்பார்கள். நமக்கு ஏன் அதெல்லாம் வேண்டாம்.” “மடையன் என்ன எழுதுவான். வந்து அழைத்துப் போக மாட்டேன் என்று எழுதியிருப்பான். காட்டு அதை" என்று நீட்டியிருந்த கடிதத்தைப் பார்த்தான். வேகம் குறைந்து விட்டது. "அத்தான் எழுதியிருக்கிறாரு அவசரப்பட்டு விட்டேன்." "சரிதான். புது இடம் பாரு. அவருக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியாது. அவருக்குச் சதா உன் மேலேதான் தம்பி அடித்துக்கொண்டிருக்கும். மைத்துனன் அனுபவமில்லாதவனாயிற்றே! ஆபீசிலே எதிர்த்துப் பேசாமல் இருப்பது எப்படி என்று அவனுக்குத் தெரியாதே என்று அப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பார். இப்பொழுதும் உனக்கு ஏதாவத புத்திமதி சொல்லியிருப்பாரு' என்று சொல்லிக்கொண்டே அந்தக் கடிதத்தை வாங்கினாள். அதைப் பலரறிய படிக்கலாமா! தனியே படிக்க வேண்டிய ஒன்றா என்று தெரியாமல் சிறிது நின்றாள். சரி! தம்பியும் கேட்கட்டுமே என்ற தயவால் படிக்கத் தொடங்கினாள். "அன்பும் பிரியமும்” அதற்குமேல் வாய்விட்டுப் படிக்காமல் நிறுத்தினாள். "ஆமாம்.கா. அவர் கையெழுத்துக் கிறுக்கெழுத்துத் தான். நிதானமாகப் படித்துக்கொள்” என்று அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றான். அவன் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டதால் மேலே வாய்விட்டுப் படிப்பதை நிறுத்திக் கொண்டாள். கண்களும் மனமும் அந்த எழுத்துக்களின் கருத்துக்களோடு உறவாடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/39&oldid=898190" இலிருந்து மீள்விக்கப்பட்டது