பக்கம்:வழுக்கு நிலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் ரா. சீனிவாசன் "மடையன் என்ன எழுதுவான்" அந்தச் சொற்களுக்கு உயிர் இருப்பதுபோல் பார்வதிக்குத் தோன்ற ஆரம்பித்தது. காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. "வந்து அழைத்துப் போக மாட்டேன் என்று எழுதியிருப்பான்" இந்த ஒலி அதனோடு இயங்கி எதிர்ஒலி செய்து கொண்டிருந்தது. "அழைத்துப் போகாவிட்டால் நானே போகிறேன். ஏன் போகக்கூடாது" என்று எண்ணியவளாய் அந்த வீட்டில் நடக்கும் நடைமுறைகளில் மனம் இல்லாதவளாக இருந்தாள். வெளியே சைக்கிளின் மணியொன்று அடிக்கும் சப்தம் கேட்டது. சிவராமன் வெளியே சென்றான். "நாளைக்கு ஆபீசில் சாயுங்காலம் சந்திக்கிறேன்." "அச்சா! நான் வர்ரான்" என்று பதில் குரல் கேட்டது. உள்ளே திரும்பியதும் சிவராமன் Ꮬ ❍ ☾öᎣ ᎧᏬ தோய்ந்தவனாகக் காணப்பட்டான். விடாமல் சிகரெட்டுப் புகையை இழுத்துக்கொண்டிருந்தான். அந்தப் புகையாவது உட்சென்று உள்ளத்தில் உள்ள கவலையைப் போக்குமா என்ற எண்ணத்தோடு இழுப்பவன் போல் இருந்தது அவன்நிலை. புகை மட்டும் வெளியே வந்தது. கவலை உள்ளே அழுந்திக் கிடந்தது. வைரம் போன்று இருந்த அவன் மனம் கவலையால் இளகிவிட்டது என்றுதான் சொல்லமுடியும். "பாரு!" என்று கொஞ்சம் கனிவோடு கூப்பிட்டான்" அழுதுகொண்டிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்களில் புத்தொளி உண்டாயிற்று. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள். சிறிது தலை நிமிர்ந்து பார்த்தாள். s "உன்னிடத்தில் ஒன்று கேட்கப் போகிறேன்" அவள் உள்ளம் குளிர்ந்தது. மகிழ்ச்சி முகத்தில் பிறந்தது. ஆனால் அவர் என்ன கேட்கப் போகிறார் என்பது அவளால் எதிர்பார்க்க முடியவில்லை. கடுமையான புயலுக்குப் பின் இவ்வளவு அமைதியும் ஏற்படுமா என்று எண்ண ஆரம்பித்தாள். ஓய்வில்லாக் கடல் அலைகள் சிறிது ஓய்வு கொள்வதுபோலிருந்தது. அவனுடைய விழிகளைத் தன் விழிகளால் அளந்து பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/40&oldid=898194" இலிருந்து மீள்விக்கப்பட்டது