பக்கம்:வழுக்கு நிலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 39 "எனக்கு இப்பொழுது ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது" மனம் திடுக்கிட்டது. அவன் பேசிய கடுஞ்சொற்களெல்லாம் பாசி போலச் சிறிது சிறிதாக மனத்தை விட்டு நீங்க ஆரம்பித்தன. "என்ன சொல்லுங்கள்?" "அவசரமாக ஐந்நூறு ரூபாய் வேண்டும்; அதற்கு உன் தங்கச் சரடு வேண்டும்; விற்றுவிடப் போகிறேன்." சிறிது நேரம் தயங்கினாள்; அவள் தந்தை கண்முன் வந்து நின்றார். அவர், "ஏன் கொடுத்தாய்?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற எண்ணம் வந்தது. அடுத்த வினாடி அந்தக் கேள்விக்குப் பதில் தேடாமல் தன் கைகள் சென்றன. அதற்குள் வெளியே கார் வந்து நின்ற சப்தம் கேட்டது. "உங்கள் அப்பா வந்திருக்கிறார்" கழற்றிய சரடு கையில் வைத்திருந்தாள். அதைத் தயங்காமல் அவன் கையில் கொடுத்தாள். "வேண்டாம்; உன் கழுத்திலேயே போட்டு வை” என்று சொல்லிவிட்டு விரைவில் வெளியே வந்தான். அதை மறுபடியும் கழுத்தில் போட்டுக் கொண்டு பார்வதியும் வெளியே வந்தாள். "வா, அப்பா” என்று சொல்லி வரவேற்றாள். "மாப்பிள்ளை, ஆபீஸுக்குப் போகவில்லையா?” "இன்று விடுமுறை" என்று சொல்லிவிட்டுச் சரியாக நின்று பேசாமல் அவன் உள்ளே போய்விட்டான். பார்வதி, அவர் கொண்டு வந்த கைப்பையை எடுத்து உள்ளே வைத்தாள். அவர் அந்த டாக்ஸியின் அளவுக் கருவியைத் தன் மூக்குக் கண்ணாடி போட்ட கண்களால் ஒரு பார்வை பார்த்தார். மூன்று ரூபாய் நாலணா கொடுத்தார். அதை அவன் கொஞ்ச நேரம் எண்ணிப் பார்த்தான். தயங்கி நின்றான். "என்னப்பா! ஏன்? "ஒன்றுமில்லைங்க.." "ஏதாவது போட்டுக் கொடுத்தனுப்புப்பா. அதுக்குத் தான் நிற்கிறான்" மனம் வராமல் அணா நாலு எடுத்துக் கொடுத்தார். அவன் அதிருப்தியோடு 'மறுபடியும் சும்மா போகணும்." என்று சொல்லிக்கொண்டு அந்த இடத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/41&oldid=898196" இலிருந்து மீள்விக்கப்பட்டது