பக்கம்:வழுக்கு நிலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ( ரா. சீனிவாசன் விட்டு நீங்கினான். கார் 'விர்ர் என்ற ஒலியோடு வேகமாகப் புறப்பட்டது. கார் நின்ற இடம் வெறிச்சென்றிருந்தது. அவர் வீட்டின் அறையில் போடப்பட்டிருந்த கை உடைந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கூடத்தில் மாட்டியிருந்த கோட் ஸ்டாண்டில் தன் மேல் துணியை எடுத்துக் கலைந்த மடிப்பு ஒன்று சேராமல் மாட்டி வைத்தார். அந்தக் கோட்முளையின் முனை அவர் குடுமியைப் போல் நீட்டிக் கொண்டிருந்தது. சிவராமனுக்கு அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற சிந்தனை சிறிது அவன் எண்ணத்தில் இடம் பெற்றது. அடுப்பங்கரையில் அக்காவிடம் அவர் வந்திருக்கும் செய்தியைச் சொன்னான். "அவள் அப்பா வந்திருக்காரு." "வராமல் என்ன. ஏதாவது பட்டணத்திலே வியாபார விஷயமா வந்திருப்பார். சத்திரம்போல் இங்கே தங்க வந்திருப்பார். ஏதாவது மூட்டை முடிச்சு." "மூட்டையும் இல்லை; முடிச்சும் இல்லை. வியாபார விஷயமாக வரவில்லை. மகளை அழைத்துப் போக வந்திருக்கிறார்” "திடீரென்று ஏன் அழைத்துப் போகவேண்டும். ஆடி மாதம் வர இன்னும் இரண்டு மாதம் இருக்கிறதே." "இல்லையக்கா. பார்வதி கடிதம் எழுதியதன்பேரில் தான் வந்திருக்கார்." "பார்த்தாயா! நான் சொல்லவில்லை! நான் வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. பூனைமாதிர இருந்து வந்து அழைத்துப் போகுமாறு கடிதம் எழுதி விட்டாள்." "இல்லை! நான்தான் எழுதச் சொன்னேன்." "பார்த்தாயா! எல்லாம் நீயேதான் காரணம். அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள். அவன் தமக்கை தங்க இடையூறாக இருப்பதால்தான் மனைவியை அனுப்பி வைக்கிறான் என்று சொல்ல மாட்டார்களா? எனக்கு ஏன் இந்தத் தொல்லை? என்னை வண்டி ஏற்றி அனுப்பிவிடு. அவருக்கு ஒரு தந்தி கொடு. ஸ்டேஷனில் வந்து இருக்கச் சொல்.” "சே! நீ ஒண்ணு. எப்பப் பார்த்தாலும் ஏதாவது நினைத்துக் கொண்டு மனதை அலட்டிக் கொள்கிறாய்." "பின் ஏன் திடீரென்று வரவேண்டும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/42&oldid=898198" இலிருந்து மீள்விக்கப்பட்டது