பக்கம்:வழுக்கு நிலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 41 "அது அப்புறம் சொல்கிறேன், அவரிடம் பேச எனக்கு விருப்பம் இல்லை. நீ போய் விசாரி" "என்னடா வெட்கம்? எங்களவர் அந்தக் காலத்திலே எவ்வளவு தாராளமா நம்ப அப்பாகிட்டே பழகுவாரு. மாமனார் மருமகன் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.” "வெட்கத்துக்காக இல்லை. விருப்பம் இல்லை." 'இருந்தாலும் வீடு தேடி வந்திருப்பவரிடம் பேசாதிருப்பது மரியாதை அல்ல!” "மரியாதை கவுரவம்; அதை அவர் முதலில் காப்பாற்றி இருக்கவேண்டும்." "என்னடா! எனக்கு ஒன்றும்.” "விளங்காது. பிறகு விளங்க வைக்கிறேன். நீ போய் வந்தவரை விசாரி. அதற்குத்தான் உன்னிடம் சொல்ல வந்தேன்." சிவகாமி அடுப்பங்கரையினின்று, தொழிற்சாலையி லிருந்து வெளிவரும் தொழிலாளி போல முகத்தில் தோன்றிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். கை கழுவிக்கொண்டு கூடம் நோக்கி வந்தாள். "வாருங்கள்! எப்பொழுது வந்தீர்கள்? இப்போது தான் வந்தாற் போலிருக்குது.” புழுக்கமான அறையில் மின்விசிறி சுற்றியது போல இருந்தது அவருக்கு. "இப்பொழுதுதான் வந்தேன். அவரை பம்பாய்க்கு மாற்றி விடுவார்கள் என்றார்களே, மாற்றலாகி விட்டதா?” அதைப்பற்றி அக்கரை இல்லாவிட்டாலும் பேசவேண்டும் என்பதற்காகக் கிடைத்த முதல் விஷயம் அதுதான். “மாற்றி விட்டார்கள். பார்வதி உள்ளே போய் அப்பாவிற்குக் காப்பி கொண்டுவா." வாசற்படியில் நின்றுகொண்டிருந்த பார்வதி சமையலறைக்குச் சென்றாள். என்றும் இல்லாத கனிவு அச்சொற்களில் இருந்தது. சமையலறையில் சிவராமன் உட்கார்ந்து கொண்டு தன் எண்ணத்தில் ஆழ்ந்தவனாய்க் கிடந்தான். "உன் அப்பா ஏன் வந்தார் ? அழைத்துப் போக வந்தாரா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/43&oldid=898200" இலிருந்து மீள்விக்கப்பட்டது