பக்கம்:வழுக்கு நிலம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ( ரா. சீனிவாசன் "தெரியவில்லை. இனிமேல்தான் தெரியும். உங்களுக்கு நகை தேவை என்கிறீர்களே?” "அதுதான் யோசிக்கிறேன்?" "நான் ஏற்கனவே தொலைத்து விட்டதாகச் சொல்லி விடுகிறேன். இதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று பதில் எதிர்பார்க்காமல் அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டு அடுப்பிலிருந்த காப்பியைக் குவளையில் ஊற்றி விரைவாக எடுத்துச் சென்றாள். "பார்வதி!” என்று கூப்பிடுங்குரலைக் காதில் போட்டுக் கொள்ளாதவளைப் போலக் கூடத்திற்கு வந்தாள். அதை ஆற்றிக் கொடுத்தாள். "பார்வதி வீட்டை விட்டு வந்ததும், வீடே வெறிச்சென்று ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை. மாணிக்கத்திற்கும் பெண் பார்க்க வேண்டும். தங்கை போய்ப் பார்க்காமல் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறான். அதற்குத்தான் பார்வதியை அழைத்துப் போகலாம் என்று வந்தேன். நல்ல காலமாக ஆக்கிப் போடுவதற்கு ஆள் இல்லை என்ற கவலையும் இல்லை. நீங்களும் இருக்கிறீர்கள்." இதைக் கேட்ட பார்வதியின் உள்ளம் வேதனை அடைந்தது. நாகரிகம் என்னும் பெயரால் பேசும் நல்ல வார்த்தைகளை அவளால் கேட்டுக்கொண்டிருந்த முடிய வில்லை. உண்மைக் காரணத்தை ஏன் உடைத்துச் சொல்லக் கூடாது என்று துடித்தாள். அவள் முகத்தில் ஏற்பட்ட சுளிப்பு அவள் உள்ளக் கசப்பை எடுத்துக் காட்டியது. நேரே விர்ரென்று உள் அறைக்குச் சென்றாள். "உங்களை நான் ஒன்று கேட்கிறேன்." "உன் உள்ளத் தூய்மையைக் கண்டு பாராட்டுகிறேன்.” "உங்கள் பாராட்டுதல் இந்த நேரத்தில் தேவை இல்லை." "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?" "உள்ளத்தில் உறுதி வேண்டும் என்கிறேன்." "எதற்கு?” "நேரே அவரிடம் போங்கள். பத்தாயிரத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள். பத்தாயிரம் பெற்று என்னை அழையுங்கள். இல்லை - தீர்மானமாக என்னை இப்பொழுதே பணமில்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவுமில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/44&oldid=898204" இலிருந்து மீள்விக்கப்பட்டது