பக்கம்:வழுக்கு நிலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 43 யென்றால் நிரந்தரமாக என்னை எங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுங்கள்,” அந்தச் சொல்லில் உறுதி காணப்பட்டது. நெகிழ்ந்த அவன் உள்ளம் இறுகி உரம் பெற்றது போன்ற உணர்வு அவனுக்கு உண்டாயிற்று. கையிலிருந்த சிகரெட் துண்டை வீசியெறிந்தான். மனிதத் தன்மை ஏதோ தன் உடலில் தோன்றியதைப் போன்று நிமிர்ந்து எழுந்தான். “சரி” என்று சொல்லிவிட்டு நேரே கூடத்திற்கு வந்தான். அவனோடு பேசுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் தைரியமாக இருந்த அவருக்கு இது வியப்பை உண்டாக்கியது. அவன் அந்த விஷயத்தைக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று சிறிது தயங்கினார். அவனோடு எப்படியாவது பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சிவகாமியிடமே சிந்தையைப் பறி கொடுத்தது போன்று தொடர்ந்து விடாமல் பேசினார். "அதனால்தான் வந்தேன். ஊரில் எல்லோரும் நலம் தான். மழைகூட கொஞ்சம் நன்றாகத்தான் பெய்தது. நாற்றெல்லாம் கிளம்பிப் பயிர்கள் நன்றாகத்தான் வந்திருக்கிறது” எதிரேயிருந்த நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டான். நேரே அவர் முகத்தைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்தான். "நீங்கள் திருமண ஏற்பாட்டின்போது சொத்து எழுதி வைக்கிறேன் என்றீர்களே! அதைப்பற்றி உங்கள் கருத்து.” "கருத்து, எழுதிவைக்க வேண்டும் என்பதுதான்." "பின் ஏன் இன்னும் செய்யாமல் இருக்கிறீர்களா?" "சந்தர்ப்பம் சரியாக இல்லாததால்தான். அதைப் பற்றி இப்பொழுதென்னப்பா அவசரம், நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம்.” சிவராமனுக்குத் தான் கடன்காரர்களுக்குச் சொல்லும் பதில் போல் தோன்றியது. அவை நம்பிக்கையற்ற சொற்கள் என்பது அவன் தன் சொந்த அனுபவத்திலேயே அறிந்த உண்மையாக அவனுக்கு நன்கு விளங்கியது. "அதெல்லாம் முடியாது. சொன்ன சொல்படி.." "நான் கீழ்ப்படிய வேண்டுமா? அவசரப்படாதே தம்பி! உன் உழைப்பாலே நீ சாப்பிடுவது தான் கவுரவம். அதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/45&oldid=898205" இலிருந்து மீள்விக்கப்பட்டது