பக்கம்:வழுக்கு நிலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ல் ரா. சீனிவாசன் உனக்குப் பெருமை. அதை விட்டு விட்டுப் பிறர் சொததை எதிர்பார்த்துத்தான் பிழைப்பேன் என்று நீ வற்புறுத்தினால்." "நாய்வாலை திருத்தலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவரைத் திருத்த முடியாது" என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு எழுந்தான். பார்வதிக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை. மறுபடியும் அவள் விழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன. மீண்டும் ஏதோ ஒரு கேள்வி கேட்பது போல் இருந்தது. அந்தப் பார்வையில் ஒரு பெரிய வினா அமைந்திருந்தது. "இதுதான் முடிவு. மறுபடியும் உன் மகளை அனுப்பும் போது பத்தாயிரத்தோடு அனுப்பு” அதற்குமேல் அவன் வாயிலிருந்து சொற்கள் பிறக்கவில்லை. வெளியே வந்து நடையில் ஏற்பட்டிருந்த சாய்வு நாற்காலியின் சாய்ந்து கொண்டான். நேரே பார்வதி வீட்டிற்குள் தன் அறைக்குச் சென்று பெட்டி மூட்டை எல்லாம் கட்டத் தொடங்கினாள். அவள் அவற்றை யெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து கூடத்தில் வைத்தாள். “புறப்படுங்கள், அப்பா!" என்று சொல்லிக் கூடத்தில் மாட்டி வைத்திருந்த மேல் துணியை எடுத்துக் கொடுத்தாள். "என்னம்மா, அவசரம். நிதானித்துப் போனால் போச்சு.' அப்பொழுதுதான் சிவகாமி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். "ஆமாம், என்ன பார்வதி அவசரம்: இரண்டு நாள் நிதானமாகத் தங்கிவிட்டுப் போகலாம். போனதுமேவா அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போகிறாய்? அலுத்து வந்தவர் கொஞ்சம்கூட அயர்ச்சி போக்க வேண்டாமா?" சிறிது நேரம் பார்வதி சும்மா இருந்தாள். "இதோ பாரு சிவகாமி! பார்வதியை அழைத்துக் கொண்டு போய் ஆடி மாதம் போனதும் அனுப்பிவிடுகிறேன். அப்பொழுது உன் தம்பியைக் கொஞ்சம் அனுப்பி வை. வந்து அழைத்து வந்து விடுகிறான்." "அக்கா! நான் போய் வருகிறேன். இருந்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/46&oldid=898207" இலிருந்து மீள்விக்கப்பட்டது