பக்கம்:வழுக்கு நிலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 45 அவரும் அந்த மேல் துணியை எடுத்துப் போட்டுக் கொண்டு தேய்ந்து போன செருப்பில் காலை மாட்டிக் கொண்டார். "இருந்து போவதற்கு நேரமில்லை. வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டேன்." "எனக்கு மனம் ஒன்றும் சரியாக இல்லை." சிவகாமியும் வீட்டு வெளிப்புறம் வரையில் தொடர்ந்தாள். "ஏய் ரிக்ஷா!" வண்டி வந்து நின்றது. மூட்டை பெட்டிகளை எடுத்து வைத்தாள். அந்தக் காட்சியில் தொடர்பில்லாதவனைப் போலக் காணப்பட்டான் சிவராமன். ரிக்ஷா அந்த இடத்தை விட்டு அகன்றது. வீடு வெறிச்சென்று விளங்கியது. தமக்கையோடு சிவராமன் அதிகம் பேசவில்லை. 7 அவனால் வீட்டில் அடைபட்டிருக்க முடியவில்லை. அந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியமே தோன்றவில்லை. வேளைக்குச் சாப்பிடுவதற்கு ஒர் இடம் வேண்டும். அதற்கு அதுதான் சரியான இடம் என்பதைத் தவிர அவனுக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. மணிபர்சில் இருந்த ரூபாய் ஐந்நூற்றோடு வீட்டை விட்டுப் புறப்பட்டான். "அக்கா! இன்று சாயுங்காலம் விரைவில் திரும்பி வந்து விடுவேன்" என்று வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான். இரவெல்லாம். ஏதேதோ குறித்துக் கொண்டிருந்த சிறு புத்தகத்தைப் பத்திரமாக ஜேபியில் போடடுக் கொண்டான். வெளியே வந்து நின்று தயங்கினான். அந்த வீட்டுக்குப் பழக்கமான கருப்பு பூனை குறுக்கே ஒடிற்று. மறுபடியும் வீட்டிற்குள் சென்றான். "அக்கா கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா." "இப்பொழுதுதானே குடித்துவிட்டுப் போனாய்.” "பூனை குறுக்கே வந்தது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/47&oldid=898209" இலிருந்து மீள்விக்கப்பட்டது