பக்கம்:வழுக்கு நிலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ரா. சீனிவாசன் "எல்லாம் ஜாதகப் பலன்தான். எதிலும் நீ முன்னுக்கு வர முடியவில்லை." "எனக்கு என்னமோ நம்பிக்கை இருக்கிறது. போகிற இடத்தில் வெற்றிதான். அப்புறம்..?" "அப்புறம் என்ன?” "ஒன்றும் இல்லை. பிறகு சொல்கிறேன்." அன்று அவன் தலை சரியாக வாரி விடாமல் இருந்தான். பழைய புஷ் கோட் ஒன்று போட்டுக்கொண்டிருந்தான். சட்டையின் உள் ஜேபியில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை மடித்து எடுத்து வைத்தான். "ஏதுடா அந்தப் பணம்?” "அது ஆபீஸ் பணம் அதைக் கட்டுவதற்கு ஒருவர் கொடுத்துவிட்டுப் போனார்." மறுபடியும் வெளியே வந்து நின்றான். சிறிது நேரம் சகுனம் பார்த்து நின்றான். ஒரு சகுனமும் வரவில்லை என்ற திருப்தியோடு பஸ் நிலையம் நோக்கி நடந்தான். சிவராமன் சென்றதும் சிவகாமிக்குப் பொழுது போவது பெரிய சிக்கலாகிவிட்டது. இருக்கிற துணிகளை யெல்லாம் துவைத்து உலர்த்தினாள். வீட்டை இரண்டு முறையும் பெருக்கிப் பார்த்தாள். சண்டை போடுவதற்குக்கூட அக்கம் பக்கத்தில் அதிகம் வீடுகள் இல்லாமலிருந்தது. "நாம் ஏன் இங்கு அகப்பட்டுக் கொண்டோம்" என்ற எண்ணமே தலையெடுத்து நின்றது. பேசாமல் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பம்பாய்க்கே போய்விட் டிருந்தால் அங்கே புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பாவது கிடைக்குமே. ஏன்தான் நான் இங்குத் தங்க இசைய வேண்டும். வந்தேனே.வந்த இடத்திலாவது நிம்மதி ஏற்பட்டதா? அவன் குடும்பத்தைச் சரிவர நடத்தக் கூடாதா? அந்தக் காலத்திலே அவசரப்பட்டு ஒப்புக் கொண்டான். அவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். சொத்து ரிஜிஸ்தர் செய்து கொடுக்காமல் கல்யாணம் ஒப்புக்கொள்ளாதே என்று. அது எப்படி நம்பாமல் வற்புறுத்துவது என மறுத்துப் பேசினான். இப்போது துன்பப்படுகிறான்." அவன் வாழ்க்கையின் நிலைமையை அளக்கத் தொடங்கியது அவள் மனம். அதே சமயம் உலைக்கு வேண்டிய அரிசியை அளந்தன அவள் கைகள். அதிலிருந்த கல் மண் இவற்றைப் பொறுக்கிக்கொண்டி ருந்தாள். வெளியே இருந்து சிட்டாய்ப் பறந்து ஒரு தபால் கடிதம் தொப்' என்று உள்ளே வந்து விழுந்தது. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/48&oldid=898211" இலிருந்து மீள்விக்கப்பட்டது