பக்கம்:வழுக்கு நிலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 47 எடுப்பதற்குள் தபால் சேவகன் நான்கைந்து வீடுகள் கடந்து விட்டான். பம்பாய் முத்திரை போட்டிருந்தது. அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். "பம்பாய் நகரம் மிகப் பெரிய நகரம். நான் வசிக்கும் இடம் ஒரு மூன்றாவது அடுக்கு மாடியில் ஓர் அறை. இதைப் போலத் தனித்தனி அறைகளில் குடும்பத்தோடு சென்னையிலிருந்து வந்தவர்கள் வந்து தங்கி இருக்கிறார்கள். உன்னையும் அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். நீ உன் தம்பியிடம் சொல்லி அவனை விடுமுறை எடுத்துக்கொண்டு உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொல்லவும். இல்லாவிட்டால் பம்பாய்க்கு வருகிறவர் களோடு பெண்கள் பெட்டியில் ஏற்றி அனுப்பச் சொல்லவும். நாளும் தேதியும் குறிப்பிட்டால் நான் ஸ்டேஷனில் நீ வரும் வண்டிக்கு வந்து காத்திருப்பேன்." அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுப் பம்பாய்க்குப் போவதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தாள். "நமக்கு ஏன் இந்தத் தொல்லை? பார்வதியோ ஊருக்குப் போய்விட்டாள். ஆடிமாதம் தான் அனுப்பப் போவதாகச் சொல்லிப் போயிருக்கிறார். அதுவரையிலும் யார் தம்பிக்குச் சோறு சமைத்துப் போடுவது? ஹோட்டல் சாப்பாடு அவனுக்கு ஒத்துக் கொள்ளாதே!. வீட்டை இப்போதே கவனிப்பதில்லை. நானும் போய்விட்டால். அவனைக் கேட்பதற்கே ஆள் இல்லாமல் போய்விடும். ஆடிமாதம் போனால் மட்டும் இவன் அழைத்து வந்தால் தானே. ஏது..? பெருந் தொல்லையாகி விட்டதே! படிக்கும்போதுதான் வீண் செலவு செய்தான் ! கல்யாணம் ஆன பிறகு சரியாகப் போய்விடுவான் என்று எதிர்பார்த்தது வீணாகப் போய் விட்டது. என்ன படிப்பு. என்ன தன்மை. எல்லாம் அம்மா கொடுத்த செல்லம்தான். அந்தக் காலத்திலே நான் ஏதாவது கேட்டால்கூட தம்பிக்குச் சட்டை தைத்துக் கொடுக்கப் பணம் வேண்டும். ஏதோ செலவு இருக்கிறது அதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கடிந்து அவன் பக்கமே பேசிவந்தாள். அதன் விளைவுதான் இப்பொழுது அவனைப் பின்தொடர்ந்து இருக்கிறது. வீட்டுக்கு வந்த மருமகளாலாவது சீர்படுவான் என்று பார்த்தால் அவள் சீர்படுவதே அருமையாக இருக்கிறது. எந்தப் பணத்தை இவன் வாரிச் செலவு செய்து விட்டுத் திண்டாடுகிறேனோ அந்தப் பணத்தின் அடிப்படையை வைத்தே அவளையும் திண்டாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/49&oldid=898213" இலிருந்து மீள்விக்கப்பட்டது