பக்கம்:வழுக்கு நிலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 49 "போன விஷயம் என்ன ஆச்சு தம்பி? ஏதோ..." "போன விஷயம் போய்விட்டது." "நீ சொல்வது விளங்கவில்லையே; ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" "அந்தப் பர்சில் இருந்த பணம் அத்தனையும் பறி கொடுத்து விட்டேன்." "யாராவது ஜேபியிலிருந்து.” "எப்படியாவது வைத்துக்கொள். பணம் போய்விட்டது அவ்வளவுதான்.” "ஏண்டா ஜாக்கிரதையாகப் போக வேண்டாமா? இந்தக் காலத்திலே பஸ் ஏறினால் பணத்தை உள் ஜேபியில் அல்லவா வைத்துப் போகவேண்டும்?” "போகிற பணம் எங்கே வைத்தாலும் போகும். அதை யாரும் தடுக்க முடியாது. எல்லாம் என் துரதிருஷ்டம் தான்." "அப்பவே சொல்லலை நான். உன் ஞாதகம் சரியா இல்லை. அவர் சொன்னது சரியாப் போச்சு. அவன் சம்பாதிக்கிறது அவன் கையிலே நிற்காது என்று பலமுறை சொல்லியிருக்கிறார். அதன்படிதான் ஆய்விட்டது." வீடு சிறிது நேரம் சில்லென்று இருப்பதுபோல் இருந்தது. வீடு வெறிச்சென்றிருந்தது. தன் தமக்கையின் முகத்தைப் பார்த்தான். அதிகநேரம் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. பார்வதியின் முகத்தை நினைத்துப் பார்த்தான். அந்த வடிவம் அவன் உள்ளத்தில் இருந்து பேசுவது போல் "இந்தா தங்கச் சரடு" என்று எடுத்துக் கொடுத்தாள் அந்த விழிகள் அசையாமல் இவனையே பார்த்தன. "ஏன் தயங்குகிறீர்கள்? பெற்றுக்கொள்ளுங்கள்” "வாழ்க்கை ஒரு சூதாட்டம். பத்தாயிரத்திற்கு உன்னைப் பணயமாக வைத்துள்ளேன்” என்று அந்த உருவத்திற்கு அவன் பதில் சொல்லத் தொடங்கினான். படுக்கையில் புரண்டான். துரக்கம் வரவில்லை. நாளைக்கு ஆபீசுக்கு வரச் சொன்னோமே வந்தால் அவனுக்கு என்ன பதில் சொல்லுவது? என்ன பதில் சொல்வது? சொல்லத் தெரியாது. இல்லை சொல்லத் தெரியாது. அவன் அசையாமல் பார்ப்பான். நான் அவனை விழித்து விழித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/51&oldid=898219" இலிருந்து மீள்விக்கப்பட்டது