பக்கம்:வழுக்கு நிலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ( ரா. சீனிவாசன் பார்ப்பேன். அப்படியே அவனும் இருப்பான். நானும் சும்மா இருப்பேன். "பணம் எங்கே? எப்பொழுது கொடுக்கிறாய்? எப்பொழுது கொடுக்கிறாய்?" என்பான். "நாளைக்கு" என்று வழக்கமான பதிலைச் சொல்லுவேன். "முடியாது. வைத்துவிட்டு மறுவேலை பார்." "இல்லை. நீ என்னை எது வேண்டுமானாலும் செய்து கொள்" அவன் என் சொக்காயைப் பிடித்து இழுப்பான். நானும் அவனிடமிருந்து திமிருவேன். இரண்டு பேரும் தெருவில் சண்டை அவன் தன் கையிலிருக்கும் கனத்த பிரம்பால் ஓங்கி அடிப்பான். ஆம். ஓங்கி அடிப்பான். நெற்றியில் ரத்தம் கரைபுரண்டு ஒடும். எங்கே என் கைக்குட்டை, கட்டு ஒரு கட்டு, என் தலையில் அவமானச் சின்னம். நெற்றியில் ஏன் காயம்? எங்கே அடிபட்டது? பதில் சொல்ல முடியாது. இதைப் போன்ற எண்ணங்கள் அவன் மனத்தில் தோன்றிக் குழம்பிக் கொண்டிருந்தன. வளைந்த மூக்கு, நீண்ட சட்டை, கழுகின் பார்வை, அரையில் விசிறியைப் போன்று மடிப்புடைய பைஜாமா. கையில் அசைந்துகொண்டிருக்கும் ஒரு கனத்த பிரம்பு. அவ்வளவும் சேர்ந்த உருவம். நேற்று சிவராமனைச் சந்தித்த அந்த உருவம் அவன் மனக்கண் முன் நின்றது. வட்டியும் அசலும் எல்லாம் பைசல் செய்து விடுகிறேன் என்று சொன்ன கெடுவுக்கு அந்த காபூலிக்காரன் கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற கவலையில் ஆழ்ந்தான். "சாப்பிடவா" என்று கூப்பிட்ட சிவாகமியின் உரத்த குரல் கேட்டது. கனவு கலைக்கப்பட்டவன் போல் விழித்து எழுந்தான். "போனால் போகிறது. அந்த ஐந்நூறு ரூபாய்க்காகவா கவலைப்படுகிறாய். ஆயுள் இருந்தால் இதைப்போல எத்தனையோ ஐந்நூறு சம்பாதிக்கலாம். எழுந்திரு. சாப்பிடு." "எனக்குப் பசி இல்லை. நீ சாப்பிடு." "வேளைக்குச் சாப்பிடாவிட்டால் உடம்பு என்னத்திற்கு ஆகும்? சாப்பிட்டால் சாப்பிடு. இல்லாவிட்டால் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது?" “எனக்குப் பசி எடுக்கவில்லை என்றால் சும்மா தொந்திரவு கொடுக்கிறாய்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/52&oldid=898221" இலிருந்து மீள்விக்கப்பட்டது