பக்கம்:வழுக்கு நிலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 51 "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ ஊரு எல்லாம் சுற்றிவிட்டு ஒட்டலில் எல்லாம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறாய். தண்டத்துக்காவது அரிசிபோட்டு வீணாகுது. நாளைக்கு வேலைக்காரிக்குக் கொட்டித் தொலைக்க வேண்டும்.” "அப்பப்பா. உன் தொல்லை பொறுக்க முடியவில்லை.” கிண்ணியைக் கழுவி அதில் சோறு போட்டாள். அதை ஒன்றும் பாதியுமாகப் பிசைந்து சாப்பிட்டான். "ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்? உங்கள் மாமனாரைக் கேட்டு ஏதாவது கொடுக்கச் சொல்லிச் சுற்றிலும் இருக்கிற கடனைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கக் கூடாதா?” "சரிதான். அந்த மடையனுக்கு அவ்வளவு அறிவு ஏது? என் கஷ்டம் அவனுக்கு எங்கே தெரியப் போவுது?" என்று சொல்லிய வண்ணம் அவன் வாயில் சிகரெட்டுப் பற்ற வைக்கத் தொடங்கினான். அவன் நினைவு பார்வதியின் மீது சென்றது. அவள் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற கற்பனையில் அவன் மனம் ஒட ஆரம்பித்தது. 8 அவன் கற்பனைக்கு ஏற்றவாறு அவளும் தன் தாயின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தாள். "அம்மா! அவர்மீது ஒன்றும் தவறு இல்லை." "என்னடி பணம் கொடுக்காவிட்டால் என்ன, உன்னை வைத்துக்கொண்டு வாழக்கூடாதா?” "அம்மா! இன்றைய பெண்களின் வாழ்க்கை பணத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது.” "எங்கள் காலத்திலே..." "உங்கள் காலத்திலே பெண்களுக்கு மதிப்பு இருந்தது. வீடு தேடிப் பெண் கேட்டார்கள். பெண் கொடுத்தால் போதும் என்றிருந்தார்கள். இப்பொழுது.” "பணம் கொடுத்தால் போதும் என்கிறார்கள்.” "அவர்மீது என்னம்மா தவறு இருக்கிறது? அப்பா ஒரு வார்த்தை சொன்னதால்தானே அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/53&oldid=898223" இலிருந்து மீள்விக்கப்பட்டது