பக்கம்:வழுக்கு நிலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ரா. சீனிவாசன் "அவர்தான் பிடிவாதக்காரராக இருக்கிறாரே. நீ அவரிடம் அப்பாவின் பிடிவாதத்தை எடுத்துச் சொல்லக் கூடாதா?” "எடுத்துச் சொன்னால்தான் என்னமமா பலன் ? சுற்றிலும் கடன் சூழ்ந்திருக்கும்போது என் பேச்சு எப்படி எடுக்கும்? அவர் பணத்திற்காகப் படுகிற கஷ்டம்..! "சரிதான்! இந்த முரட்டு மனுஷனும் லேசில் திருந்தக் கூடியவர் அல்ல. பார்க்கலாம்; எப்படியாவது சரிப்படுத்த லாம். அண்ணன் வருகிற நேரம். கிண்ணியெல்லாம் கழுவி ഞഖ.' பார்வதி எழுந்தாள். அகலமான கூடத்திற்கு வந்தாள். அவரும் நானும் திருமணத்தின் போது எடுத்த படம் கூடத்தில் மாட்டியிருந்தது. அதைச் சற்று உற்று நோக்கினாள். ஏதோ மறுபடியும் அவரோடு தொடர்ந்து வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அன்புக் கரத்தால் தன் கைகளைப் பிடித்து அவர் மெல்லக் கிள்ளியது நினைவிற்கு வந்தது. நிழற்படம் பிடிக்கும் போது தன் கைவிரலைத் தடவிக் கொடுத்த அந்த மென்மையான நிகழ்ச்சி, சட்டென்று வந்த நாணத்தை உள்ளடக்க வந்த சிரிப்பைத் தான் அடக்கிக் கொண்ட அந்த நிகழ்ச்சி கவனத்திற்கு வந்தது. சீவி வாரிய அவனுடைய பளபளத்த கிராப்பும், இறுகக் கட்டிய 'டையும் சிலைக்குச் செதுக்கி வைத்தது போன்ற அழகிய நெற்றியும் மலர்ந்த கண்களும் கொண்ட உருவம் அவள் கவனத்திற்கு வந்தது. அந்த உண்மையான வடிவம் முழுவதையும் அந்த நிழற்படத்தால் காட்ட முடியாது என்பதை உணர்ந்தாள். நிழற்படம் எல்லாம் வெறும் நிழல்தான். உண்மையான வடிவம் உள்ளத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அதே கூடத்தில் நாலு பேர் மத்தியில் தன் தந்தை அவருக்குக் கொடுத்த சீர் வரிசைகள் எல்லாம் கவனத்திற்கு வந்தன. பத்தாயிரம் மதிப்புள்ள சொத்தை எழுதிக் கொடுக்கிறேன் என்று அப்பா சொன்னதும் அவள் கவனத்திற்கு வந்தது. ஏன் இப்போது கொடுக்கத் தயங்குகிறார்? காரியம் முடிந்துவிட்டது. இனி எப்படிப் போனால் என்ன என்ற கொள்கை அவரிடம் இருப்பதை அவள் உள்ளம் வெறுக்கத் தொடங்கியது. அண்ணன் வரும் நேரம் என்று சொல்லியது கவனத்திற்கு வந்தது. பெட்டியின் கீழ் இருந்த எவர் சில்வர்" கிண்ணங்களைக் கழுவ எடுத்தாள். அண்ணனாவக அப்பாவுக்குச் சொல்லக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/54&oldid=898225" இலிருந்து மீள்விக்கப்பட்டது