பக்கம்:வழுக்கு நிலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 53 கூடாதா என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. அண்ணன் கல்லூரியில் படித்துப் பண்பு கொண்டவனா யிற்றே. அவனாவது எனக்காகப் பேசக் கூடாதா? அப்பொழுது திருமணத்திற்கு எவ்வளவு ஆர்வமாக வேலைகளைக் கவனித்தான். அவருக்கு என்று அவனே நேரிற் கடைக்குச் சென்று உயர்ந்த ரக சூட்' துணிகளை யெல்லாம் எடுத்துக் கொடுத்தானே. அத்தானோடு மனமகிழ்ச்சியோடு அளவளாவி மகிழ்வானே. அன்று எங்களை வழிவிட வந்த போது ரயில்நிலையம் வரை வந்தது போதாது என்று அடுத்த ஸ்டேஷன் வரை வந்து வழிவிட்டுச் சென்றானே. வண்டியில் இருந்து இறங்கும்போது அவன் பிரிவதற்காக விட்ட கண்ணிரை நான் பார்க்கப் போகிறேனே என்பதற்காகச் சட்டென்று கைக்குட்டையால் மறைத்துக் கொண்டானே. அவ்வப்போது அவன் எழுதி வந்த கடிதங்களில் அறிவுரை கூறாத கடிதம் இருக்காது. அவன் கணக்குப் படிப்பவன் என்றாலும் திருக்குறள் போன்ற நூல்களைப் படிப்பவனா யிற்றே. தங்கையின் உள்ளத்தை அறியும் ஆற்றல் அவனுக்கு இல்லாமல் வேறு யாருக்குத்தான் இருக்க முடியும் என்றெல்லாம் அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. “நல்ல இடத்தில் கொடுக்க வேண்டும். எனக்குச் சல்லிக்காசு வைக்கவேண்டாம். படித்தவனுக்கே அவளைக் கொடுக்கவேண்டும். பட்டிக்காட்டில் அவளைத் தள்ளி அவள் வாழ்வைப் பாழ்படுத்தவேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சொற்கள் அதே அடுப்பங்கரையில் தன் காதில் விழுந்த அந்த நிகழ்ச்சி அவள் கவனத்திற்கு வந்தது. ஒருகால், அப்பா பணம் கொடுக்காதது அண்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவன் பெரும்போக்காக நடந்து கொள்கிறவன். இதையெல்லாம் ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறான். பள்ளிக்கூடத்துப் புத்தகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் நன்றாகத் தெரியும் அவனுக்கு. ஆனால், வீட்டில் கூடத்தில் என்ன இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றால் பார்த்துத்தானே சொல்ல முடியும். அவனுக்கு எப்படி அப்பாவின் பேச்செல்லாம் தெரியப் போகிறது. ஏன் அண்ணனிடம் நானே இதெல்லாம் கேட்கக் கூடாது. அவனுக்குச் சிரித்துப் பேசத் தெரியுமே அல்லாமல் சிந்திக்கத் தெரியாதே. எல்லாம் இங்கிருந்து கொண்டு போய்விடலாம் என்று ஏளனம் செய்வானே தவிர என் பேச்சின் உள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/55&oldid=898227" இலிருந்து மீள்விக்கப்பட்டது