பக்கம்:வழுக்கு நிலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ரா. சீனிவாசன் கருத்தை அவன் ஏன் ஆழ்ந்து சிந்திக்கப் போகிறான். அப்படி அவன் சிந்திப்பதாக இருந்தாலும் நானே எப்படி இதையெல்லாம் கேட்க முடியும். அம்மாவோடு தாராளமாக எதையும் பேசலாம். அண்ணனிடம் இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்ல முடியுமா என்று சிந்தித்த வண்ணம் பார்வதி அந்தக் கிண்ணிகளைக் கழுவி எடுத்து வைத்தாள். அண்ணனை எதிர்பார்த்திருந்த அவள் கண்கள் அவள் அப்பாவைத்தான் கண்டன. வரும்போதே மிக்க மகிழ்ச்சி கொண்டவர் போல் விளங்கினார். "எல்லாம் வெற்றிதான். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்" என்று சொல்லிய வண்ணம் பிய்ந்து போன அந்தச் செருப்பை வெளியே விட்டு வீட்டுக்குள் நுழைந்தார். ஆவலாக அந்தச் செய்தி கேட்க அம்மா ஓடினாள். "என்ன சொன்னார்கள். பெண்ணுக்குச் சீர் வரிசை யெல்லாம்.” "சிறப்பாகச் செய்வதாகச் சொன்னார்கள். நம்ம பையன் பரீட்சையிலே முதல் வகுப்பிலே தேர்ந்து விட்டான் என்ற செய்தி கேட்டு அவர்கள் நிரம்ப மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் நல்ல செல்வாக்கு உடையவர்கள். அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் கூட அவருடைய தயவால்தான் தேர்தலில் ஜெயித்தாராம். அவர் சொன்னால் எல்லா ஆபீசரும் கேட்பார்களாம். அவர் நினைத்தால் எந்த உத்தியோகமும் நம்ம பையனுக்குக் கிடைத்துவிடும் என்று சொல்லுகிறார்கள்." "நல்லதாப் போச்சு. அந்தப் பெண் கூட கொஞ்சம் படிச்சிருக்கிறதாகக் கேள்வி.” "கொஞ்சம் என்ன, ஒரே வகுப்பில் பல வருஷங்கள் படித்த பெருமையும் அவளுக்கு உண்டு" என்று குறுக்கே பேசலாம் என்று நினைத்த பார்வதிக்கு ஏனோ அச்சொற்களை அடக்கிக் கொண்டான். "பார்வதி! நீதான் முதலில் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்க்க வேண்டும். உனக்குப் பிடித்தால் எங்களுக்குப் பிடித்தாற் போல்தான்." அந்த மகிழ்ச்சி கலந்த சொற்களைக் கேட்ட பார்வதி யின் உள்ளம் தன் கவலையை மறந்தது. இனி வருங்காலம் தன் வீட்டை அலங்கரிக்கப் போகின்ற அணணியின் உருவத்தைப் பற்றிக் கற்பனை செய்யத் தொடங்கினாள். அந்த வீட்டில் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/56&oldid=898229" இலிருந்து மீள்விக்கப்பட்டது