பக்கம்:வழுக்கு நிலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ரா. சீனிவாசன் ஒரு பெரிய காவியமாகப் படிக்கிறார்கள். அந்த மாதிரி வகையிலே நீயும் பரீட்சை முடிந்ததும் மாறி விட்டாயா?" "இல்லை, பார்வதி! அவர்கள் வாழ்க்கையே ஒரு நாவல் போல் சில சமயங்களில் அமைந்து விடுகிறது. நாவலில் வரும் பாத்திரங்களாகவே மாறி விடுகிறார்கள். அதனால் தான் சுவாரஸ்யமாக இருக்கிறது." "அண்ணா! உனக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப் போகிறேன். எனக்கு என்ன அண்ணா தரப் போகிறாய்?" என்று குழந்தை போலப் பேச ஆரம்பித்தான். "நீ கேட்கும் பரிசு!" "உண்மையாகவா, அண்ணா! என்று கேட்ட அவள் குரலில் குழந்தைமையும் அன்பும் ஊறிக் கிடந்தது. தானும் அண்ணனும் சின்ன வயதில் சிறு வீடுகட்டி விளையாடிய அந்தப் பருவத்திற்குப் போய்விட்டவளைப் போலக் காணப்பட்டாள். மேலாடை போட்டுத் திருமணம் ஆகிவிட்ட அந்தப் பருவத்தை மறந்து பாவாடை கட்டிய சிறு பெண் போல அவள் பேச்சு அமைந்திருந்தது. "சொல்லட்டுமா!" "சொல்லித் தொலையேன்." "நம்ம வீட்டுக்கு அண்ணி வரப் போகிறாள்." "அண்ணியாவது, கிண்ணியாவது, உனக்கு ஒன்றும் வேலை இல்லை." "உண்மையாகத்தான் அண்ணா. அப்பா ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். அண்ணியை முதல் முதலிலே நீ பார்க்க முடியாதண்ணா. நான் போய்ப் பார்த்த பிறகுதான் நீ பார்க்கலாம். எனக்குப் பிடித்தால் தான் நீ பார்க்கலாம்.” - "யார்? அந்தச் செங்கல்பட்டு மிராசுதார் பெண் தானே? அப்பா கிட்டே எனக்கு ஏதாவது உத்தியோகம் பார்த்து வைத்து விடுகிறேன் என்று சொல்லி இருப்பான்." அதற்குள் கூடத்திலிருந்து வந்த தந்தையும் பேச்சில் குறுக்கிட்டுக் கலந்து கொண்டார். "ஆமாம். அதனால்தான் ஏற்பாடு செய்தேன். எடுத்த வுடனே நானுறு ரூபாய் சம்பளத்திலே கெஜட்டட் ஆபீசர் வேலை வாங்கித் தருவார். அப்புறம் நகை நட்டு சீர் வரிசை சொத்து நிலம் எல்லாம் சேர்ந்து முப்பதினாயிரத்திற்குப் பஞ்சம் இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/58&oldid=898233" இலிருந்து மீள்விக்கப்பட்டது