பக்கம்:வழுக்கு நிலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 57 "அப்பா! ஒன்று தங்கைக்கு நீங்கள் கொடுப்பதாகச் சொல்லிய பத்தாயிர ரூபாய் சொத்து எழுதி வைத்தால் தான் என் திருமணப் பேச்சை எடுக்க நான் ஒப்புக்கொள்ளுவேன். தங்கையின் மங்கலமான வாழ்வுதான் முதலில் நான் விரும்புவது. என்னைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று பலமுறை வற்புறுத்தியிருக்கிறேன். நீங்கள் என் திருமணப் பேச்சைப் பயன்படுத்திக்கொண்டு தங்கையை இங்கு அழைத்து வந்து விட்டீர்கள். முதலில் தங்கையின் சிந்தும் கண்ணிரை நிறுத்தி அவள் வாழ்க்கையைச் சீர் செய்யுங்கள்" என்று வெடுக்கென்று பேச ஆரம்பித்தான். "அவன் கிடக்கிறான் மடப்பயல், அவனுக்கு இளைத்த வர்களா நாம் அவன் நினைத்தபடி பணம் இங்கே என்ன கொட்டியா கிடக்குது கொடுக்க?" என்று வீறாப்புக் கலந்த குரலில் பேசத் தொடங்கினார். பார்வதியின் உள்ளம் உவகை கொண்டது. தன் அண்ணன் தன்னிடம் காட்டும் தன்னலமில்லா அந்தத் தூய்மையைக் கண்டு வியந்தாள். இனித் தன்வாழ்வைச் சூழ்ந்திருக்கும் கருமுகில்கள் அகன்று பளிச்சென்று விளங்கும் என்று உணர ஆரம்பித்தாள். "அது மட்டும் இல்லை; அப்பா! அவன் உத்தியோகம் வாங்கிக் கொடுப்பான் என்ற காரணத்துக்காக அவன் பெண்ணை மணக்க நான் சம்மதிக்க மாட்டேன்." "சரிதான். உன் திறமையை நம்பி அதற்காக எந்த உத்தியோகமும் உனக்குக் காத்துக் கிடக்கவில்லை." "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. கூலி வேலை செய்து எனக்குப் பிழைக்கத் தெரியும். அதற்காக ஒருவரிடமும் சுயமதிப்பை நான் இழக்க விரும்பவில்லை. அவன் வாங்கிக் கொடுக்கிற உத்தியோகத்திற்காக அந்தப் பெண்ணை மணக்க எனக்குச் சம்மதம் இல்லை." "சரி. நீ போய்ச் சாப்பிடு, நிதானமாகப் பேசுவே." பார்வதி சமையலறையில் கழுவி வைத்த கிண்ணத்தை எடுத்துவைத்துச் சோறு போட்டாள். "அண்ணா! நீ தீவிரமாகப் பேசுவது...” "உனக்குப் பிடிக்கவில்லையா?” "இல்லே அண்ணா! தீவிரமாகப் பேசுகிறவர்கள் தாம் தம் கொள்கைகளை மிகத் தீவிரமாக விட்டு விடுகிறார்கள். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/59&oldid=898235" இலிருந்து மீள்விக்கப்பட்டது