பக்கம்:வழுக்கு நிலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ல் ரா. சீனிவாசன் இந்தத் திருமணத்தை மறுப்பதில் நியாயமில்லை. வேண்டு மானால் உனக்குப் பெண் பிடிக்கவில்லையென்றால் மறுத்து விடு. அது நியாயம். அது உன் விருப்பம். எனக்கு சொத்து வேண்டாம் அவர்கள் பார்த்து எனக்கு உத்தியோகம் தர வேண்டாம் என்று சொல்வது அது உன் கையில் இல்லை. உலகம் அந்த உரிமையை உனக்குக் கொடுத்து உன்னை வாழ வைக்க முன் வராது. ஏழையாய்க் கூலியாய் இரந்துண்ணும் வாழ்வை வேண்டுமானால் இந்த உலகம் கொடுக்க முன்வரும். அதனால் வரும் நன்மையை வேண்டாம் என்று சொல்லாதே அண்ணா!' அவள் பேசி முடிப்பதற்கும் அவன் சாப்பிட்டு முடிப்பதற்கும் சரியாக இருந்தது. "சரி! உன் அறிவு எனக்குத் தேவையாயிருக்கும் பொழுது வந்து கேட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லிய வண்ணம் எழுந்து கை கழுவிக் கொண்டான். "அம்மா! இன்று தீர்மானமாகச் சொல்கிறேன். எனக்கு உத்தியோகம் வருவது எல்லாம் சேர்ந்து முப்பதினாயிரம் கிடைக்கும் என்று அப்பா சொல்வதற்கெல்லாம் நான் ஒப்புக் கொள்கிறேன். முதலிலே தங்கைக்கு எழுதி வைக்க வேண்டிய சொத்தை எழுதி வைக்கச் சொல். அப்புறம்தான் என் திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்வேன்." "நானுந்தான் அவரிடம் வற்புறுத்தி வருகிறேன். அவர் கேட்டால்தானே.” "சரிதான். நான் என் மகளுக்குச் சொத்துப் பத்தாயிரத்தை இப்பொழுது எழுதி வைத்துவிட்டால் அவர்கள் எப்படி இவனுக்குப் பெண்ணைக் கொடுப்பார்கள். எதைப் பார்த்து அவர்கள் இவனுக்கு இவ்வளவு சிறப்புச் செய்வார்கள். இதெல்லாம் தெரியாமல் இவன் பேசுகிறான். எல்லாம் இவன் எதிர்காலத்தைப் பார்த்துத்தான் நான் எதுவும் செய்யாதிருக்கிறேன். பார்வதிக்கு என்ன தெரியும்! அவன் கேட்டனுப்பினால் இவள் கேட்கிறாள். அவளுக்கு மட்டும் நீ சிறப்பாக வாழ்வதிலே விருப்பம் இல்லையா? உன் திருமணம் ஆன பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்களேன். நானா வேண்டாம் என்கிறேன். அது வரையிலும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அப்புறம் நீ வேண்டியதை எழுதி வையேன். நானா வேண்டாம் என்கிறேன்!” உள்ளறையில் பார்வதி தன் அண்ணன் வாங்கிவந்த "சினிமா விசிறி பத்திரிகையில் இருந்த படங்களைப் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/60&oldid=898239" இலிருந்து மீள்விக்கப்பட்டது