பக்கம்:வழுக்கு நிலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் , 59 கொண்டிருந்தாள். அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு விதவிதமாக உடுத்திக் கொண்டிருந்த நடிகைகளின் ஆடை அலங்கார அழகை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்பா சொன்ன சொற்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. இருளிருந்த இடத்தில் திடீர் என்று வெளிச்சம் உண்டானது போல் இருந்தது. வெளியே சன்னலை எட்டிப் பார்த்தாள். வானத்தில் முகில்கள் மூடாமல் எங்கும் வெட்ட வெளியாக நீலவானம் விளங்கியது. வெண்முகில்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன. நிலவு தன் தண்ணிய கதிர்களை வீசிக் கொண்டிருந்தது. தன் உள்ளத்தில் பெருஞ்சுமை நீங்கியது போல் இருந்தது. தன் எதிர்கால வாழ்வை மறைத்திருந்த திரை சிறிது விலகியது போல இருந்தது. திரைக்கு அப்புறம் இருள் சூழ்ந்துகொண்டிருந்த காரணத்தால் திரையை விலக்கிப் பார்த்தால் என்ன பயன்! அங்கு வெளிச்சம் இருந்தால்தானே, திரையை விலக்கிப் பார்த்தால் பயன் உண்டு. வாழ்வின் பாதை இனித் தெளிவாக அமைந்து கிடந்தது போல் விளங்கியது. இதுவரையிலும் தன் தந்தையைப் பற்றிக் கருதியது அவ்வளவும் தவறு என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. அறையில் கடிகாரத்தில் மணி பத்து அடித்தது. வீடு அமைதியுற ஆரம்பித்தது. அவள் தன் அண்ணனின் தூய அன்பையும் தந்தையின் கடமையுணர்ச்சியையும் எண்ணி மகிழ்ந்தாள். அவள் உள்ளத்தில் இருந்த சுமையெல்லாம் நீங்கி ஒய்வு பெறுவதைப் போல அவளும் கவலையில்லாமல் பிறகு துரங்க ஆரம்பித்தாள். சன்னலில் வந்த மெல்லிய காற்று அவளைத் தட்டித் துரங்க வைப்பது போல் இருந்தது. அதற்குத் தாலாட்டுப் பாடுவது போல் கடிகாரத்தின் அசைவு அசைந்து கொண்டிருந்தது. 9 விழித்து எழுந்ததும் தனக்காகப் பொழுது விழித்துக் காத்துக் கொண்டிருப்பதை அப்பொழுத தான் சிவராமன் உணர்ந்தான். அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த காப்பியின் மீது அவன் பார்வை சென்றது. விரிக்காமல் மடித்துக் கிடந்த நாள் செய்தித்தாள் அப்படியே கிடந்தது. அதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குச் செல்லவில்லை. எழுந்ததும் பரபரப்பாகச் செய்தித்தாளைத் தேடும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/61&oldid=898242" இலிருந்து மீள்விக்கப்பட்டது